TCV 54

இலங்கையை அழித்தவன் தங்கும் ஊர் அரங்கம்

805 இலைத்தலைச்சரந்துரந்து இலங்கைகட்டழித்தவன் *
மலைத்தலைப்பிறந்திழிந்து வந்துநுந்துசந்தனம் *
குலைத்தலைத்திறுத்தெறிந்த குங்குமக்குழம்பினோடு *
அலைத்தொழுகுகாவிரி அரங்கமேய அண்ணலே!
805 ilait talaic caram turantu * ilaṅkai kaṭṭazhittavaṉ *
malait talaip piṟantu izhintu * vantu nuntu cantaṉam **
kulaittu alaittu iṟuttu ĕṟinta * kuṅkumak kuzhampiṉoṭu *
alaittu ŏzhuku kāviri * araṅkam meya aṇṇale (54)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

805. The god who shot sharp arrows and destroyed Lankā, stays in Srirangam where the Kaveri river that was born in the summits of mountains and descends from the hills carries in its rolling waves fragrant sandal and kungumam paste as they break and dash on the banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலைத் தலை இலைபோன்ற நுனியையுடைய; சரம் துரந்து அம்புகளைப் பிரயோகித்து; இலங்கை இலங்கையின்; கட்டழித்தவன் அரணை அழித்த பெருமான்; மலை ஸஹ்யமென்னும் மலையின்; தலை சிகரத்திலே; பிறந்து பிறந்து; இழிந்து வந்து கீழ் இறங்கி வந்து; நுந்து தள்ளப்படும்; சந்தனம் சந்தனமரங்களால்; குலைத்து குங்கும கொடியை குலைத்து; அலைத்து தள்ளி அலசி; இறுத்து ஒடித்து; எறிந்த வெளிப்படுத்தின; குங்கும குங்கும; குழம்பினோடு குழம்போடு; அலைத்து அலைமோதிக்கொண்டு; ஒழுகு ஓடிவரும்; காவேரி காவேரிக் கரையின்; அரங்கம் மேய ஸ்ரீரங்கம் கோயிலிலிருக்கும்; அண்ணலே பெருமானாவார்