RNA 35

இராமானுசனின் திருவடிகளையே யான் போற்றுவேன்

3927 நயவேன்ஒருதெய்வம் நானிலத்தே * சிலமானிடத்தைப்
புயலேயெனக் கவிபோற்றிசெய்யேன் * பொன்னரங்க மென்னில்
மயலேபெருகுமிராமானுசன்மன்னுமாமலர்த்தாள் *
அயரேன் * அருவினையென்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?
3927 nayaveṉ ŏru tĕyvam nāṉilatte * cila māṉiṭattaip
puyale ĕṉak kavi poṟṟi cĕyyeṉ ** pŏṉ araṅkam ĕṉṉil
mayale pĕrukum irāmānucaṉ * maṉṉu mā malarttāl̤
ayareṉ * aruviṉai ĕṉṉai ĕvvāṟu iṉṟu aṭarppatuve? (35)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3927. On this earth I will not worship any other god except my lord. I will not compose poems praising some people saying that they are like generous clouds. I will never grow tired of worshiping the beautiful flower-like feet of the lord of golden Srirangam. Rāmānujā makes his devotees love him and I am his devotee. How could the results of my karmā come to me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு தெய்வம் அடியேன் வேறு ஒரு தெய்வத்தை; நயவேன் விரும்ப மாட்டேன்; நானிலத்தே இவ்வுலகில்; சில மானிடத்தை சில நீச மனிதர்களைக் குறித்து; புயலே என மேகம் போன்றவனே என்று; கவி கவிகள் செய்து; போற்றி செய்யேன் துதிக்கமாட்டேன்; பொன் அரங்கம் திருவரங்கம்; என்னில் என்று சொன்னாலே; மயலே பெருகும் அளவற்ற பக்தி பெருகும்; இராமநுசன் இராமநுசருடைய; மன்னு மா சிறந்த; மலர்த் தாள் திருவடித் தாமரைகளை; அயரேன் மறக்கமாட்டேன்; அரு வினை கொடிய பாவங்கள்; என்னை எவ்வாறு என்னை எவ்வாறு; இன்று அடர்ப்பதுவே இன்று ஆக்ரமிக்கக் கூடும்
nayavĕn would not be involved in; oru dheivam any deity outside of this (other than emperumān);; kavi pŏṝi seyyĕn will not praise with poetic words; puyalĕ ena like comparing dark clouds for the generosity; sila mānidaththai of some lowly persons; nānilaththĕ in this world.; pon arangam ennil īf the word admirable thiruvarangam is uttered,; mayal perugum irāmānusan that would drive emperumānār craśy due to love;; ayarĕn ī will not forget (at any time), the; mannu matching each other and well set; extremely worship worthy; malar and enjoyable; thāl̤ divine feet (of such emperumānār);; evvāṛu in what way/path; aru could the hard to cut off; vinai karmas; ennai inṛu adarppadhu occupy me now?; puyal rainy clouds;; mayal ­ madness/loss of sense (due to love).