பெரிய ஜீயர் அருளிய உரை முப்பத்து இரண்டாம் பாட்டு –அவதாரிகை இராமா னுசனனைப் பொருந்தினம் -என்று இவர் ஹ்ருஷ்டராகிற வித்தைக் கண்டவர்கள் -நாங்களும் –இவ்விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில் எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள்-ஒன்றும் இல்லையே என்ன –எம்பெருமானாரை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணாதிகள் எல்லாம் தன்னடையே வந்து சேரும் -என்கிறார் –
**பொருந்திய தேசும் பொறையும்