PT 9.4.8

நிலவு கூடுகிறது: எனினும் புல்லாணி தொழுதேன்

1785 தூம்புடைக்கைவேழம் வெருவமருப்பொசித்த *
பாம்பினணையான் அருள்தந்தவா! நமக்கு *
பூஞ்செருந்திபொன்சொரியும் புல்லாணிகைதொழுதேன் *
தேம்பலிளம்பிறையும் என்தனக்குஓர்வெந்தழலே.
1785 tūmpu uṭaik kai vezham * vĕruva maruppu ŏcitta *
pāmpiṉ aṇaiyāṉ * arul̤tantavā namakku **
pūñ cĕrunti pŏṉ cŏriyum * pullāṇi kaitŏzhuteṉ *
tempal il̤am piṟaiyum * ĕṉ-taṉakku or vĕm tazhale-8

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1785. She says, “He broke the tusks of the hollow-trunked elephant and rests on Adisesha on a snake bed and gives his grace to us. I fold my hands and worship him in Thiruppullāni where the cherundi trees shower golden flowers. The crescent moon with its mark sheds hot fire on me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூம்பு உடை துளையுடைய; கை துதிக்கையையுடைய; வேழம் வெருவ குவலயாபீட யானை அஞ்ச; மருப்பு ஒசித்த அதன் கொம்புகளை முறித்த; பாம்பின் ஆதிசேஷன் மேலிருக்கும்; அணையான் பெருமானை வணங்கிய எனக்கு; அருள் நமக்கு அருளா நமக்கு; தந்தவா! செய்தான்? அந்தோ!; பூஞ் செருந்தி அழகிய புன்னைமரங்கள்; பொன் பொன் போன்ற மலர்களை; சொரியும் உதிர்க்குமிடமான; புல்லாணி திருப்புல்லாணியை; கைதொழுதேன் வணங்கினேன்; தேம்பல் இளம் பிறையும் மிக இளைய சந்திரனும்; என் தனக்கு என் மீது; ஓர் வெம் தழலே வெப்பத்தை வீசுகிறான்