PT 9.4.6

என் உடல் இளைத்தது: எனினும் புல்லாணி தொழுதேன்

1783 சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் *

அழன்றுகொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் *

செழுந்தடம் பூஞ்சோலைசூழ் புல்லாணிகைதொழுதேன் *

இழந்திருந்தேன் என்தன் எழில்நிறமும் சங்குமே.
1783 cuzhaṉṟu ilaṅku vĕm katiroṉ * teroṭum poy maṟaintāṉ *
azhaṉṟu kŏṭitu āki * am cuṭaril tāṉ aṭumāl **
cĕzhun taṭam pūñcolai cūzh * pullāṇi kaitŏzhuteṉ *
izhantirunteṉ-ĕṉ-taṉ * ĕzhil niṟamum caṅkume-6

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1783. She says, “The hot shining sun goes on his chariot, wanders all day and sets in the evening. My heart burns cruelly, paining me all day in the heat. I fold my hands and worship him in Thiruppullāni surrounded with blooming groves and flourishing ponds. I have lost my beautiful color and my conch bangles. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுழன்று இலங்கு மேருவைச் சுற்றி வரும் பிரகாசமான; வெங்கதிரோன் உஷ்ணமான சூரியன்; தேரோடும் தனது தேரோடே சென்று; போய்மறைந்தான் அஸ்தமித்தான்; அம் சுடரில் அழகிய கிரணங்களையுடைய சந்திரன்; அழன்று கொடிது ஆகி வெப்பத்துடன் குரூரமாக; தான் அடுமால் என்னை தஹிக்கின்றான் அந்தோ!; செழுந் தடம் செழுமையான தடாகங்களாலும்; பூஞ் சோலை சூழ் பூஞ்சோலைகளாலும் சூழ்ந்த; புல்லாணி திருப்புல்லாணியை; கைதொழுதேன் வணங்கின நான்; என் தன் எழில் நிறமும் என் அழகிய நிறமும்; சங்குமே கை வளைகளையும்; இழந்திருந்தேன் இழந்தேன்