PT 8.9.3

சவுரிராஜனுக்கே நான் உரியவன்

1730 விடையேழன்றடர்த்து வெகுண்டுவிலங்கலுற *
படையால்ஆழிதட்ட பரமன்பரஞ்சோதி *
மடையார்நீலம்மல்கும்வயல்சூழ் கண்ணபுரமொன்று
உடையானுக்கு * அடியேன் ஒருவர்க்குரியேனோ? (2)
1730 viṭai ezh aṉṟu aṭarttu * vĕkuṇṭu vilaṅkal uṟa *
paṭaiyāl āzhi taṭṭa * paramaṉ parañcoti **
maṭai ār nīlam malkum vayal cūzh * kaṇṇapuram ŏṉṟu
uṭaiyāṉukku * aṭiyeṉ ŏruvarkku uriyeṉo?-3

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1730. The highest god, the light of the spiritual world, who killed seven bulls to marry Nappinnai, became angry at the king Rāvana, crossed the ocean, went to Lankā and defeated the Rakshasās. I am a slave of that matchless lord of Thirukannapuram surrounded with fields with channels that flow with water and neelam flowers bloom, and I will never be the devotee of any other god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விடைஏழ் அன்று அன்று ஏழு எருதுகளை [கண்ணன்]; அடர்த்து வெகுண்டு சீற்றத்துடன் அடக்கினவனும்; விலங்கல் உற திருகூடமலையில் சேரும்படி [இராமன்]; படையால் வானரச் சேனைகளைச் சேர்த்து; ஆழி தட்ட கடலில் அணை கட்டினவனும்; பரமன் பரஞ்சோதி பரமனுமான எம்பெருமான்; மடை ஆர் மடைகள் எங்கும்; நீலம் மல்கும் நீலோத்பல மலர்களாலே நிறைந்து; வயல் சூழ் சூழ்ந்த வயல்களையுடைய; கண்ணபுரம் ஒன்று திருக்கண்ணபுரத்தில்; உடையானுக்கு இருக்கும் பெருமானுக்கு; ஒருவர்க்கு மட்டுமே; அடியேன் அடியவன் ஆன நான்; உரியேனோ? மற்றவர்க்கு அடியவன் ஆவேனோ?