PT 8.9.2

பள்ளிகொண்டானை அடைந்து பிழைத்தேன்

1729 தருமானமழைமுகிலைப் பிரியாதுதன்னடைந்தார் *
வருமானம்தவிர்க்கும் மணியை, அணியுருவில் *
திருமாலைஅம்மானை அமுதத்தைக் கடல்கிடந்த
பெருமானை * அடியேன் அடைந்துய்ந்துபிழைத்தேனே.
1729 taru māṉa mazhai mukilaip * piriyātu taṉ aṭaintār *
varum māṉam tavirkkum * maṇiyai aṇi uruvil **
tirumālai ammāṉai * amutattaik kaṭal kiṭanta
pĕrumāṉai- * aṭiyeṉ aṭaintu uyntu pizhaitteṉe-2

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1729. Thirumāl, as generous as rain, dear as a mother to all, a lustrous jewel colored like a dark cloud that removes the troubles of his devotees took nectar from the ocean and rests on Adisesha. I, his devotee, came to him (lord of kannapuram) for refuge and am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தரு கல்பக தரு போன்றவனும்; மான பெரிய; மழை முகிலை காளமேகம் போன்றவனும்; பிரியாது ஒரு காலும் விட்டுப்பிரியாமல்; தன் அடைந்தார் தன்னை அடைந்தவர்களுக்கு; வரும் மானம் நேரும் அவமானத்தை; தவிர்க்கும் போக்கும்; மணியை மணி போன்றவனும்; அணி உருவில் அழகிய உருவத்தையுடைய; அமுதத்தை அமுதம் போன்றவனும்; கடல் கிடந்த பாற்கடலில் இருப்பவனுமான; திரு மாலை திருமாலை; அம்மானை ஸ்வாமியானவனை; பெருமானை பெருமானை; அடியேன் அடைந்து அடியேன் அடைந்து; உய்ந்து பிழைத்தேனே உய்வு பெற்றேன்