செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-
(செரு நீர்-யுத்தம் செய்வதே ஸ்வ பாவம் கை வந்த கலை -வேல் கையில் கொண்டவர் தமிழின்-இனிய தமிழ் வரு நீர் வையம்-கடல் சூழ்ந்த வையகம் நீஞ்சல் உஜ்ஜீவனம் அடைய பாடி ஆடுங்கள் நீங்கள் பாடி ஆட வையகம் உஜ்ஜீவிக்கும்