PT 8.6.1

திருக்கண்ணபுரம் தொழுதால் உய்வுண்டு

1698 தொண்டீர்! உய்யும்வகைகண்டேன் துளங்காஅரக்கர்துளங்க * முன்
திண்தோள்நிமிரச்சிலைவளையச் சிறிதேமுனிந்ததிருமார்பன் *
வண்டார்கூந்தல்மலர்மங்கை வடிக்கண்மடந்தைமாநோக்கம்
கண்டாள் * கண்டுகொண்டுகந்த கண்ணபுரம்நாம்தொழுதுமே. (2)
1698 ## tŏṇṭīr uyyum vakai kaṇṭeṉ * tul̤aṅkā arakkar tul̤aṅka * muṉ
tiṇ tol̤ nimirac cilai val̤aiyac * ciṟite muṉinta tirumārvaṉ **
vaṇṭu ār kūntal malar-maṅkai * vaṭik kaṇ maṭantai mā nokkam
kaṇṭāṉ * kaṇṭukŏṇṭu ukanta * kaṇṇapuram nām tŏzhutume.-1

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1698. O devotees, I have found a way to be saved. Our divine strong-shouldered lord became angry, bent his bow and made the Rākshasas who never tremble in war shiver. He is happy when he sees the doe-like glance of Lakshmi with hair that swarms with bees. He stays in Thirukkannapuram— let us go to there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்! தொண்டர்களே!; உய்யும் உஜ்ஜீவிக்கும்; வகை கண்டேன் வழியை அறிந்து கொண்டேன்; முன் துளங்கா ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத; அரக்கர் அரக்கர்கள்; துளங்க அஞ்சும்படியாகவும்; திண் தோள் திடமான தோள்கள்; நிமிர நிமிரும்படியாகவும்; சிலை வளைய வில்லை வளையும்படியாகவும்; சிறிதே முனிந்த சிலரையே அழித்தவனாய்; திருமார்மன் திருமகளை மார்பிலுடையவனாய்; வண்டார் வண்டுகள் படிந்த; கூந்தல் கூந்தலையுடைய; மலர் மங்கை மலர் மங்கையும்; மடந்தை பூமாதேவியும் இவர்களின்; வடி கூரிய; கண் கண்களின் பார்வையை; மா நோக்கம் அனுபவிப்பவனான; கண்டான் பெருமான்; மா உலக ரக்ஷணத்திற்காக; கண்டு ஏகாந்தமான இடம் என்று கண்டு; கொண்டு கொண்டு; உகந்த உகந்த எம்பெருமானிருக்கும்; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்