PT 8.5.7

இராப்பொழுது துன்புறுத்துகிறதே!

1694 கலங்கமாக்கடல்கடைந்தடைத்து இலங்கையர்கோனது வரையாகம்
மலங்க * வெஞ்சமத்துஅடுசரம்துரந்த எம்மடிகளும்வாரானால் *
இலங்குவெங்கதிரிளமதியதனொடும் விடைமணியடும் * ஆயன்
விலங்கல்வேயினதோசையுமாய் இனிவிளைவதொன்றறியேனே.
1694 kalaṅka māk kaṭal kaṭaintu aṭaittu * ilaṅkaiyar
koṉatu varai ākam
malaṅka * vĕm camattu aṭu caram turanta * ĕm
aṭikal̤um vārāṉāl **
ilaṅku vĕm katir il̤a mati-ataṉŏṭum *
viṭai maṇi aṭum * āyaṉ
vilaṅkal veyiṉatu ocaiyum āy * iṉi
vil̤aivatu ŏṉṟu aṟiyeṉe-7

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1694. (kannapuram) She says, “Our dear lord who built a bridge, crossed the ocean, fought with Rāvana the king of Lankā in a terrible war and terrified the Rākshasas has not come to see me. The hot shining sun, the crescent moon and the sound of the cowbells all bring me sorrow, and even the music of the cowherd’s flute gives me pain. The night is longer than an eon. I don’t know when it will pass. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலங்க மாக் கடல் பெரிய கடல் கலங்கும்படி; கடைந்து பாற்கடலைக் கடைந்தவனும்; அடைத்து கடலில் அணைகட்டி; இலங்கையர் கோனது இலங்கை அரசன் ராவணனின்; வரை ஆகம் மலங்க மலைபோன்ற மார்பு துடிக்க; வெஞ்சமத்து போரில்; அடு சரம் பிளக்கும்படியான அம்புகளை; துரந்த பிரயோகித்த; எம் அடிகளும் எம் பெருமானும்; வாரானால் வரவில்லையே என் செய்வேன்; இலங்கு கடூரமான; வெங் கதிர் கிரணங்களையுடைய; இள மதி அதனொடும் இளம் சந்திரனும்; விடை எருதின் கழுத்தில் கட்டிய; மணி அடும் மணி ஓசையும் என்னை துன்பப்படுத்துகிறது; ஆயன் விலங்கல் கண்ணனின்; வேயினது மூங்கிற்குழலின்; ஓசையும் ஆய் ஓசையும் என்னைக் கஷ்டப்படுத்துகிறது; இனி விளைவது மேலும் என்ன வரப்போகிறதோ; ஒன்று அறியேனே! ஒன்றையும் அறியேனே