PT 8.5.2

இருள் பரவிவிட்டதே! யான் என் செய்வேன்?

1689 மாரிமாக்கடல்வளைவணற்கிளையவன் வரைபுரைதிருமார்பில் *
தாரினாசையில்போயினநெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணைகாணேன் *
ஊரும்துஞ்சிற்றுஉலகமும் துயின்றது ஒளியவன்விசும்பியங்கும் *
தேரும்போயிற்றுத்திசைகளும்மறைந்தன செய்வதொன்றறியேனே.
1689 māri māk kaṭal val̤aivaṇaṟku il̤aiyavaṉ *
varai purai tirumārvil *
tāriṉ ācaiyil poyiṉa nĕñcamum *
tāzhntatu or tuṇai kāṇeṉ **
ūrum tuñciṟṟu ulakamum tuyiṉṟatu *
ŏl̤iyavaṉ vicumpu iyaṅkum *
terum poyiṟṟu ticaikal̤um maṟaintaṉa *
cĕyvatu ŏṉṟu aṟiyeṉe-2

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1689. She says, “ My heart, longing for the garland on his divine chest, has gone to him (who is in kannapuram) who is the younger brother of white-colored BalaRāma but has the color of a cloud and the dark ocean. There is no one here to help me now. The village sleeps and the world too. The chariot of the shining sun has disappeared from the sky and there is no light to be seen anywhere in the night. I don’t know what to do. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாரி மேகம்போன்றவனும்; மாக் கடல் நீலக்கடல் போன்றவனும்; வளை வணற்கு சங்குபோன்ற வெளுத்த பலராமனுக்கு; இளையவன் பின் பிறந்த கண்ணனின்; வரை புரை மலைபோன்ற; திருமார்பில் மார்பிலுள்ள; தாரின் ஆசையில் மாலையைப் பெறும் ஆசையால்; போயின நெஞ்சமும் போன என் மனமும்; தாழ்ந்தது மீண்டுவரத் தாமதித்தது; ஓர் துணை உதவிக்கும்; காணேன் ஒருவரையுங்காணேன்; ஊரும் துஞ்சிற்று ஊரும் உறங்கியது; உலகமும் துயின்றது உலகமும் உறங்கியது; ஒளி அவன் விசும்பு ஆகாசத்தில் சூரியனும் அவன்; இயங்கும் தேரும் இயக்கும் தேரும்; போயிற்று மறைந்தது; திசைகளும் மறைந்தன திசைகளும் மறைந்தன; செய்வது ஒன்று என்ன செய்வதென்றே; அறியேனே! தெரியவில்லை