PT 8.1.8

கண்ணபுரத்தம்மானையே இவள் காதலிக்கின்றாள்

1655 கொற்றப்புள்ளொன்றேறி
மன்னூடேவருகின்றானென்கின்றாளால் *
வெற்றிப்போரிந்திரற்கும்
இந்திரனேயொக்குமாலென்கின் றாளால் *
பெற்றக்கால்அவனாகம்
பெண்பிறந்தோமுய்யோமோ! என்கின்றாளால் *
கற்றநூல்மறையாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1655 kŏṟṟap pul̤ ŏṉṟu eṟi * maṉṟūṭe varukiṉṟāṉ
ĕṉkiṉṟāl̤āl *
vĕṟṟip por intiraṟkum * intiraṉe ŏkkumāl
ĕṉkiṉṟāl̤āl **
pĕṟṟakkāl avaṉ ākam * pĕṇ piṟantom uyyomo?
ĕṉkiṉṟāl̤āl- *
kaṟṟa nūl maṟaiyāl̤ar * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-8

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1655. My daughter says, “He comes riding on a victorious eagle in the middle of a mandram in the village. ” She says, “For Indra himself who conquers all in battles, he is Indra. ” She says, “Couldn’t we born as women have the fortune of embracing his chest?” Did she see the dear god of Kannapuram where Vediyars, scholars of the Vedās, live?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொற்ற புள் வெற்றி கொள்ளும் ஒரு கருட; ஒன்று ஏறி பறவையின் மீது ஏறி; மன்றூடே வருகின்றான் வீதியிலே வருகின்றான்; என்கின்றாளால் என்கிறாள்; வெற்றிப் போர் வெற்றிப் போர் புரிவதில்; இந்திரற்கும் இந்திரனுக்கும்; இந்திரனே தலைவனே இவன்; ஒக்குமால் ஒப்பற்றவன் அன்றோ?; என்கின்றாளால் என்கிறாள்; பெற்றக் கால் அப்பெருமானின்; அவன் ஆகம் திருமார்பைப் பெற்றால்; பெண் பிறந்தோம் பெண்ணாகப் பிறந்த நாம்; உய்யோமோ? உய்ந்து போக மாட்டோமோ?; என்கின்றாளால் என்கிறாள்; கற்ற நூல் முறையாக சாஸ்திரங்களைக் கற்ற; மறையாளர் வைதிகர்கள் வாழும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?