PT 8.1.6

சவுரிராஜன் உருவத்தையே புகழ்கின்றாள்

1653 பேராயிரமுடையபேராளன் பேராளனென்கின்றாளால் *
ஏரார்கனமகரகுண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *
நீரார்மழைமுகிலே நீள்வரையேஒக்குமாலென்கின்றாளால் *
காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1653 பேர் ஆயிரம் உடைய பேராளன் * பேராளன் என்கின்றாளால் *
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் * எண் தோளன் என்கின்றாளால் **
நீர் ஆர் மழை முகிலே * நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் *
கார் ஆர் வயல் அமரும் * கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? 6
1653 per āyiram uṭaiya perāl̤aṉ * perāl̤aṉ ĕṉkiṉṟāl̤āl *
er ār kaṉa makara kuṇṭalattaṉ * ĕṇ tol̤aṉ ĕṉkiṉṟāl̤āl **
nīr ār mazhai mukile * nīl̤ varaiye ŏkkumāl ĕṉkiṉṟāl̤āl *
kār ār vayal amarum * kaṇṇapurattu ammāṉaik kaṇṭāl̤kŏlo?-6

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1653. My daughter says, “He has a thousand names. He is generous, he is generous!” She says, “His ears are decorated with beautiful emerald earrings and he has eight arms. ” She says, “He has the color of a dark cloud that pours rain. He is like a tall mountain. ” Did she see the dear god of Kannapuram surrounded with flourishing fields?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பேர் ஆயிரம் உடைய ஆயிரம் நாமங்களைக் கொண்ட; பேராளன் பெருமையுடைய பேராளன்; பேராளன் பேராளன் என்று பலமுறை; என்கின்றாளால் சொல்கிறாள்; ஏர் ஆர் கன அழகிய கனமான; மகரகுண்டலத்தன் மகரகுண்டலங்கள் உடையவன்; எண் தோளன் எட்டுத்தோள்களை உடையவன்; என்கின்றாளால் என்கிறாள்; நீர் ஆர் நீர் நிறைந்த; மழை முகிலே மழைகால மேகத்தையும்; நீள் வரையே பெரிய மலையையும்; ஒக்குமால் ஒத்திருப்பவன்; என்கின்றாளால் என்கிறாள்; கார் ஆர் கருத்த பயிர்களால் சூழ்ந்த; வயல் அமரும் வயல்கள் நிறைந்த; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?