PT 7.4.2

சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்

1579 அம்புருவவரிநெடுங்கண் * அலர்மகளை
வரையகலத்தமர்ந்து * மல்லல்
கொம்புருவவிளங்கினமேல்
இளங்கன்றுகொண்டெறிந்தகூத்தர்போலாம் *
வம்பலரும்தண்சோலை வண்சேறை
வானுந்துகோயில்மேய *
எம்பெருமான்தாள்தொழுவார்
எப்பொழுதும்என்மனத்தேஇருக்கின்றாரே.
1579 am puruva vari nĕṭuṅ kaṇ * alar-makal̤ai
varai akalattu amarntu mallal *
kŏmpu uruva vil̤aṅkaṉimel * il̤aṅ kaṉṟu
kŏṇṭu ĕṟinta kūttar polām **
vampu alarum taṇ colai * vaṇ ceṟai
vāṉ untu koyil meya *
ĕm pĕrumāṉ tāl̤ tŏzhuvār * ĕppŏzhutum
ĕṉ maṉatte irukkiṉṟāre-2

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1579. On his chest he keeps Lakshmi with long and sharp eyes like arrows. He is the dancer who threw the Asuran when he came as a calf at the Asuran who had taken the form of a vilām fruit and killed them both. If the devotees worship the feet of my divine god, in the temple of Thiruthancherai surrounded with cool groves where bees swarm, they will stay in my heart always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் புருவ அழகிய புருவத்தையும்; வரி வரிகளையுடைய; நெடுங்கண் நீண்ட கண்களுமுடைய; அலர் தாமரையில் தோன்றிய திருமகளை; வரை அகலத்து மலை போன்ற மார்பில்; அமர்ந்து தரித்திருக்கும்; மல்லல் தழைத்த கொம்புகள்; கொம்பு உருவமாக இருக்கும்; உருவ விளாமர அசுரனை; விளங்கனிமேல் விளாம்பழத்தின் மேல்; இளங் கன்று இளங் கன்று போல் வந்த; கொண்டு அசுரனை கொண்டு; எறிந்த வீசி எறிந்த; கூத்தர் போலாம் நடையழகுடையவனும்; வம்பு அலரும் மணம் மிக்க; தண் சோலை குளிர்ந்த சோலைகளையுடைய; வண் சேறை அழகிய திருச்சேறையில்; வான் உந்து வானளவு உயர்ந்த; கோயில் மேய கோயிலில் இருக்கும்; எம்பெருமான் எம்பெருமானின்; தாள் தொழுவார் பாதம் பற்றுபவர்; எப்பொழுதும் எப்பொழுதும்; என் மனத்தே என் மனத்தே; இருக்கின்றாரே இருக்கின்றாரே