PT 7.4.10

யாவரும் சாரநாதப் பெருமாளையே தொழுமின்

1587 பூமாண்சேர்கருங்குழலார்போல்நடந்து
வயல்நின்றபெடையோடு * அன்னம்
தேமாவினின்னிழலில்கண்துயிலும்
தண்சேறையம்மான்தன்னை *
வாமான்தேர்ப்பரகாலன்
கலிகன்றியொலிமாலைகொண்டுதொண்டீர்! *
தூமாண்சேர்பொன்னடிமேல்சூட்டுமின்
நும்துணைக்கையால்தொழுதுநின்றே. (2)
1587 ## pū māṇ cer karuṅ kuzhalārpol naṭantu *
vayal niṉṟa pĕṭaiyoṭu * aṉṉam
temāviṉ iṉ nizhalil kaṇ tuyilum *
taṇ ceṟai ammāṉ-taṉṉai **
vā māṉ terp parakālaṉ * kalikaṉṟi
ŏli mālai kŏṇṭu tŏṇṭīr *
tū māṇ cer pŏṉ aṭimel cūṭṭumiṉ * -num
tuṇaik kaiyāl tŏzhutu niṉṟe-10

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1587. The poet Kaliyan, Yama to his enemies, who drives swift chariots yoked with horses, composed ten musical pāsurams on the god resting on Adisesha on the water in cool Thiruthancherai where swans beneath the shadows of a mango trees are with their mates that walk like women wearing flowers in their dark hair. O devotees! Fold your hands together and worship his pure golden feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னம் அன்னப்பறவைகள்; வயல் நின்ற வயல்களில்; பெடையோடு பெடையோடு; பூ மாண் சேர் அழகிய பூக்களணிந்த; கருங் குழலார் கருங்கூந்தலையுடைய; போல் இளம் பெண்களைப்போல; நடந்து நடந்து; தேமாவின் இன் தென்னைமரத்தினுடைய; நிழலில் நிழலில்; கண் துயிலும் கண் துயிலும்; தண் சேறை குளிர்ந்த திருச்சேறை; அம்மான் தன்னை பெருமானைக் குறித்து; வா மான் ஓடிவரும் குதிரைகள் பூட்டின; தேர் தேரையுடையரான; பரகாலன் பரகாலன் என்னும்; கலிகன்றி திருமங்கையாழ்வார்; ஒலிமாலை அருளிச் செய்த; கொண்டு பாசுரங்களைக் கொண்டு; தொண்டீர் ஓ பக்தர்களே!; தூ மாண் தூய அழகிய; சேர் பொன் பொன் போன்ற பாசுரங்களை; அடிமேல் திருவடிகளின் மேல்; நும் துணைக் உங்கள் கூப்பின; கையால் கையால் அஞ்சலி செய்து; தொழுது நின்றே வணங்கி; சூட்டுமின் சூட்டுங்கள்