PT 7.3.4

கண்ணனுக்கே என் மனம் தாழும்

1571 உரங்களால்இயன்றமன்னர்மாளப்
பாரதத்துஒருதேரைவர்க்காய்ச்சென்று *
இரங்கியூர்ந்துஅவர்க்குஇன்னருள்செய்யும்
எம்பிரானை வம்பார்புனல்காவிரி *
அரங்கமாளிஎன்னாளிவிண்ணாளி
ஆழிசூழிலங்கைமலங்கச்சென்று *
சரங்களாண்டதண்தாமரைக்கண்ணனுக்கன்றி
என்மனம்தாழ்ந்துநில்லாதே.
1571 uraṅkal̤āl iyaṉṟa maṉṉar māl̤ap *
pāratattu ŏru ter aivarkku āyc cĕṉṟu *
iraṅki ūrntu avarkku iṉ arul̤ cĕyyum
ĕmpirāṉai * vampu ār puṉal kāviri **
araṅkam āl̤i ĕṉ āl̤i viṇ āl̤i *
āzhi cūzh ilaṅkai malaṅkac cĕṉṟu *
caraṅkal̤ āṇṭa taṉ tāmarai kaṇṇaṉukku
aṉṟi * ĕṉ maṉam tāzhntu nillāte-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1571. The lord of Naraiyur drove Arjunā’s chariot in the Bhārathā war and killed the strong Kauravā kings, giving his grace to the Pāndavās, and went to Lankā surrounded by the ocean and destroyed it. He is the god of Srirangam on the bank of Kaveri where bees swarm around the abundant water and he, the lord of the sky, he rules me. My mind will not be devoted to anyone except the beautiful lotus-eyed Kannan, the ruler of all the worlds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரங்களால் இயன்ற வலிமை மிக்க; மன்னர் மாள துர்யோதன மன்னர்கள் மாள; பாரதத்து பாரதப் போரில்; ஐவர்க்கு ஆய்ச் பாண்டவர்களுக்கு; சென்று இரங்கி உதவ எண்ணி; ஒரு தேர் ஒரு தேரில்; ஊர்ந்து அவர்க்கு ஊர்ந்து அவர்களுக்கு; இன் அருள் இனிய அருள்; செய்யும் எம்பிரானை செய்த ஸ்வாமியும்; வம்பு ஆர் புதிய ஜலத்தால்; புனல் காவிரி சூழ்ந்த காவேரியால்; அரங்கம் திருவரங்கம் பெரியகோயிலை; ஆளி ஆள்பவனும்; என் ஆளி என்னையாள்பவனும்; விண் ஆளி பரமபதத்தை ஆள்பவனும்; ஆழி சூழ் இலங்கை கடல் சூழ்ந்த இலங்கையை; மலங்கச் சென்று துயரப்படும்படி சென்று; சரங்கள் ஆண்ட அம்புகளை எய்த; தண் தாமரை குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற; கண்ணனுக்கு கண்ணனைத் தவிர; அன்றி மற்றவர் விஷயத்தில்; என் மனம் என் மனம்; தாழ்ந்து நில்லாதே பணிந்து நிற்காது