PT 7.3.2

நறையூர் நம்பியைக் நான் ஆதரிப்பேன்

1569 தாய்நினைந்தகன்றேயொக்க என்னையும்
தன்னையேநினைக்கச்செய்து * தான்எனக்காய்
நினைந்தருள்செய்யும் அப்பனை
அன்றுஇவ்வையகமுண்டுமிழ்ந்திட்ட
வாயனை * மகரக்குழைக்காதனை
மைந்தனை மதிட்கோவலிடைகழி
யாயனை * அமரர்க்கரியேற்றை என்
அன்பனையன்றிஆதரியேனே.
1569 tāy niṉainta kaṉṟe ŏkka * ĕṉṉaiyum
taṉṉaiye niṉaikkac cĕytu * tāṉ ĕṉakku
āy niṉaintu arul̤ cĕyyum appaṉai *
aṉṟu iv vaiyakam uṇṭu umizhntiṭṭa
vāyaṉai ** makarak kuzhaik kātaṉai *
maintaṉai matil̤ koval iṭaikazhi
āyaṉai * amararkku ari eṟṟai * ĕṉ
aṉpaṉai aṉṟi ātariyeṉe-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1569. He, the Lord of Naraiyur, adorned with emeralds on his ears, makes me think of him like a calf that thinks of his mother, and he thinks of me and gives his grace to me. . He, the lion of the gods in the sky and a cowherd in Thirukkovalur surrounded with walls, swallowed the world and spat it out. I will not praise anyone except my dear god, my friend.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாய் நினைந்த தன் தாயை நினைக்கும்; கன்றே ஒக்க கன்று போல; என்னையும் உபகாரம் பெற்ற என்னையும்; தன்னையே தன்னையே; நினைக்க நினைக்க; செய்து தான் செய்து தானே; எனக்கு ஆய் நினைந்து அஞ்ஞனான எனக்கு; அருள் செய்யும் அருள் செய்யும்; அப்பனை அன்று அப்பனை அன்று; இவ் வையகம் இவ் உலகம்; உண்டு பிரளயத்தில் உண்டு; உமிழ்ந்திட்ட பின் உமிழ்ந்த; வாயனை வாயையுடையவனை; மகரக் குழைக் மகரக் குண்டலத்தை; காதனை காதிலணிந்தவனை; மைந்தனை மைந்தனை; மதிள் மதிள் சூழ்ந்த; கோவல் திருக்கோவலூர்; இடைகழி இடை கழியில்; ஆயனை முதலாழ்வார்கள் நடுவே நின்ற கண்ணனை; அமரர்க்கு தேவர்களுக்கு; அரி சிங்கமாகவும்; ஏற்றை காளையாகவும் தோற்றமளிப்பவனை; என் என்னிடத்தில்; அன்பனை அன்றி அன்பு உடையவனை அன்றி; ஆதரியேனே வேறொருவனை ஆதரிக்கமாட்டேன்