PT 7.3.10

இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்துவிடும்

1577 தோடுவிண்டலர்பூம்பொழில்மங்கையர்
தோன்றல் வாள்கலியன்திருவாலி
நாடன் * நன்னறையூர் நின்றநம்பிதன் *
நல்லமாமலர்ச்சேவடிசென்னியில்
சூடியும்தொழுதும்எழுந்தாடியும்
தொண்டர்கட்குஅவன்சொன்னசொல்மாலை *
பாடல்பத்திவைபாடுமின்தொண்டீர்!
பாடநும்மிடைப்பாவம்நில்லாவே. (2)
1577 ## toṭu viṇṭu alar pūm pŏzhil maṅkaiyar *
toṉṟal vāl̤ kaliyaṉ * tiru āli
nāṭaṉ * nal naṟaiyūr niṉṟa nampi-taṉ **
nalla mā malarc cevaṭi cĕṉṉiyil *
cūṭiyum tŏzhutum ĕzhuntu āṭiyum *
tŏṇṭarkaṭku avaṉ cŏṉṉa cŏl-mālai *
pāṭal pattu-ivai pāṭumiṉ tŏṇṭīr
pāṭa * nummiṭaip pāvam nillāve-10

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1577. Kaliyan, a poet and chief of Thirumangai of Thiruvāli surrounded with groves blooming with flourishing flowers that swarm with bees, put his head on the divine flower-like feet of Nambi and worshiped him. He danced and composed ten Tamil pāsurams for the devotees of the lord of Naraiyur. O devotees, sing these ten songs and the results of your karmā will go away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோடு இதழ்கள்; விண்டு அலர் விரிந்து மலரும்; பூம் பொழில் பூஞ்சோலைகளையுடைய; மங்கையர் திருமங்கை நாட்டு; தோன்றல் தலைவரும்; வாள் வாள் படையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; திரு ஆலி நாடன் திருவாலி நாட்டுக்கு அரசரும்; நல் நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பி தன் நின்ற நம்பியின்; நல்ல மா அழகிய சிறந்த; மலர் சே அடி திருவடித்தாமரைகளை; சென்னியில் தலையில்; சூடியும் தரித்துக் கொண்டும்; தொழுதும் வணங்கியும்; எழுந்து ஆடியும் எழுந்து ஆடியும்; தொண்டர்கட்கு தொண்டர்களுக்காக; அவன் அருளிச்செய்த; சொன்ன சொல் மாலையான; இவை இந்த பத்து; பாடல் பத்து பாசுரங்களையும்; தொண்டீர்! தொண்டர்களான; பாடுமின் நீங்கள் ஓதுவீர்களாகில்; பாட நும்மிடை உங்களிடம்; பாவம் நில்லாவே பாவங்கள் நிற்காது