PT 7.2.9

நம்பீ! எனக்குத்தான் இப்பேறு கிடைத்தது

1566 ஊனேராக்கைதன்னை உழந்தோம்பிவைத்தமையால் *
யானாய்என்தனக்காய் அடியேன்மனம்புகுந்த
தேனே! * தீங்கரும்பின்தெளிவே! என் சிந்தைதன்னால் *
நானேஎய்தப்பெற்றேன் நறையூர்நின்றநம்பீயோ!
1566 ūṉ ner ākkai * taṉṉai uzhantu ompi vaittamaiyāl *
yāṉ āy ĕṉ-taṉakku āy * aṭiyeṉ maṉam pukunta
teṉe ** tīṅ karumpiṉ tĕl̤ive * ĕṉ cintai-taṉṉāl *
nāṉe ĕytap pĕṟṟeṉ * naṟaiyūr niṉṟa nampīyo-9

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1566. You gave me this body made of flesh and I have suffered in this world. Now you, sweet as the clear juice of sweet sugarcane, are mine. I am your slave and you have entered my heart. I thought of you always and reached you, O Nambi of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் ஆய் என்னுள் இருப்பவனே!; என் தனக்கு ஆய் எனக்காகவே; அடியேன் மனம் என் மனதில்; புகுந்த தேனே! புகுந்த தேனே!; தீங்கரும்பின் இனிமையான கரும்பின்; தெளிவே! ரசம் போன்றவனே!; நறையூர் நறையூரில்; நின்ற நம்பீயோ! இருக்கும் நம்பியே!; ஊன் நேர் இந்த உடம்பை; ஆக்கை தன்னை இந்த சரீரத்தை; உழந்து ஓம்பி சிரமப்பட்டு வளர்த்து; வைத்தமையால் வைத்ததால்; என் சிந்தை தன்னால் என் சிந்தையினால்; நானே இப்போது நானே வந்து உன்னை; எய்தப் பெற்றேன் அடையப்பெற்றேன்