PT 7.10.4

எனக்கு உற்றுழி உதவுபவன் பக்தவத்சலன்

1641 பேய்முலைத்தலைநஞ்சுண்டபிள்ளையைத்
தெள்ளியார்வணங்கப்படுந்தேவனை *
மாயனைமதிட்கோவலிடைகழிமைந்தனை
அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை * இலங்கும்சுடர்ச்சோதியை
எந்தையைஎனக்குஎய்ப்பினில்வைப்பினை *
காசினைமணியைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.
1641 pey mulait talai nañcu uṇṭa pil̤l̤aiyait *
tĕl̤l̤iyār vaṇaṅkappaṭum tevaṉai *
māyaṉai matil̤ koval iṭaikazhi
maintaṉai * aṉṟi antaṇar cintaiyul̤
īcaṉai ** ilaṅkum cuṭarc cotiyai *
ĕntaiyai ĕṉakku ĕyppiṉil vaippiṉai *
kāciṉai maṇiyaic-cĕṉṟu nāṭik *
kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1641. He, the young Māyan who drank poisonous milk from the breasts of the devil Putanā and is worshipped by sages with minds devoid of confusion at Thirupprithi, stays in Thirukkovalur surrounded by walls and backwaters. He, my father, the shining light whom the Vediyars keep in their minds, is my refuge when I grow weak and my jewel and treasure when I am poor. I searched for him and found him in Thirukannamangai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய் முலைத் தலை நஞ்சு பூதனையின் விஷப் பாலை; உண்ட பிள்ளையை உண்ட பாலனை; தெள்ளியார் ஞானிகளால்; வணங்கப்படும் வணங்கப்படும்; தேவனை மாயனை தேவனை மாயனை; மதிள் ப்ராகாரங்களினால் சூழப்பட்ட; கோவல் இடைகழி திருக்கோவலூர் இடைக்கழியில்; மைந்தனை அன்றி உறைகின்ற மைந்தனை; அந்தணர் சிந்தையுள் அந்தணர் சிந்தையுள்; ஈசனை இருந்துகொண்டு; இலங்கும் அவர்களை நியமிப்பவனும்; சுடர்ச் சோதியை பெரும் ஜோதிமயமாயிருப்பவனும்; எந்தையை எனக்கு எம்பெருமானை எனக்கு; எய்ப்பினில் வருங்காலத்தில்; வைப்பினை உதவக் கூடிய நிதி போன்றவனும்; காசினை பொன் போன்றவனுமான அவனை; மணியை ரத்தினம் போன்றவனை; சென்று நாடி சென்று நாடி; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே