PT 6.9.2

மனமே! நறையூரில் இராமபிரான்தான் உள்ளான்

1529 கழியாரும்கனசங்கம் கலந்துஎங்கும்நிறைந்தேறி *
வழியாரமுத்தீன்று வளங்கொடுக்கும்திருநறையூர் *
பழியாரும்விறலரக்கன் பருமுடிகளவைசிதற *
அழலாறும்சரந்துரந்தான் அடியிணையேஅடைநெஞ்சே!
1529 kazhi ārum kaṉa caṅkam * kalantu ĕṅkum niṟaintu eṟi *
vazhi āra muttu īṉṟu * val̤am kŏṭukkum tirunaṟaiyūr ** -
pazhi ārum viṟal arakkaṉ * paru muṭikal̤-avai citaṟa *
azhal ārum caram turantāṉ * aṭi-iṇaiye aṭai nĕñce-2

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1529. O heart, go and reach the feet of the divine god who shot his fire-like arrows and made the ten crowns of the strong ill-famed Rākshasa Rāvana fall. He stays in Thirunaraiyur where the Kaveri that nourishes the land and makes it flourish brings shells from the salt pans and leaves them on the street with the pearls that they gave birth to.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுழி ஆரும் உப்புக் கழிகளில்; கன சங்கம் நிறைந்த சங்குகள்; கலந்து எங்கும் எல்லா இடங்களிலும்; நிறைந்து ஏற நிறைந்து ஏறி வர; வழி ஆர வீதிகள் நிறையும்படி; முத்து ஈன்று முத்துக்களை சுரந்து; வளம் கொடுக்கும் வளம் கொடுக்கும்; திருநறையூர் திருநறையூரிலிருக்கும் எம்பெருமானை; பழி ஆரும் மிகுந்த பழியையும்; விறல் மிடுக்கையும் உடைய; அரக்கன் பரு முடிகள் ராவணனின் பத்துத் தலைகளும்; அவை சிதற அறுந்து விழும்படி; அழல் ஆறும் சரம் நெருப்பு அம்புகளை; துரந்தான் பிரயோகித்தவனின்; அடி இணையே அடி இணையே; அடை நெஞ்சே! அடை நெஞ்சே!