PT 6.5.6

பேய்ச்சி பாலுண்டவன் தங்கும் ஊர் நறையூர்

1493 பகுவாய்வன்பேய்கொங்கைசுவைத்து ஆருயிருண்டு *
புகுவாய்நின்ற போதகம்வீழப்பொருதானூர் *
நெகுவாய்நெய்தற்பூமதுமாந்திக் கமலத்தின் *
நகுவாய்மலர்மேல் அன்னமுறங்கும்நறையூரே.
1493 paku vāy vaṉ pey * kŏṅkai cuvaittu ār uyir uṇṭu *
puku vāy niṉṟa * potakam vīzhap pŏrutāṉ ūr ** -
nĕku vāy nĕytal * pū matu māntik kamalattiṉ *
naku vāy malarmel * aṉṉam uṟaṅkum-naṟaiyūre-6

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1493. The lord who drank milk from the breasts of the devil Putanā and killed her, and fought and killed the elephant that guarded the palace of Kamsan stays in beautiful Thirunaraiyur where swans drink honey from dark neydal flowers and sleep on blooming lotus flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பகு வாய் பெரிய வாயை யுடையவளும்; வன் பேய் கெட்ட எண்ணமுடையவளுமான; கொங்கை பூதனையின்; சுவைத்து பாலைச் சுவைத்து; ஆருயிர் அவளது அருமையான; உண்டு உயிரையும் மாய்த்தவனும்; புகு வாய் கம்ஸன் அரண்மனையின் நுழை வாயிலில்; நின்ற போதகம் வீழ நின்ற யானை மாள; பொருதான் ஊர் போர்புரிந்தவன் இருக்கும் ஊர்; அன்னம் ஹம்ஸங்கள்; நெகு வாய் அலர்ந்த; நெய்தல் பூ கரு நெய்தற் பூக்களிலே; மது மாந்தி தேனைப் பருகி; நகு வாய் விரிந்த வாயையுடையதும்; கமலத்தின் மலர் மேல் தாமரைப்பூக்களிலே; உறங்கும் உறங்கும; நறையூரே திருநறையூராகும்