PT 6.5.4

உரலில் கட்டுண்டவன் உறைவிடம் நறையூர்

1491 உறியார்வெண்ணெயுண்டு உரலோடும்கட்டுண்டு *
வெறியார்கூந்தல்பின்னைபொருட்டு ஆன்வென்றானூர் *
பொறியார்மஞ்ஞை பூம்பொழில்தோறும்நடமாட *
நறுநாண்மலர்மேல் வண்டுஇசைபாடும்நறையூரே.
1491 uṟi ār vĕṇṇĕy uṇṭu * uraloṭum kaṭṭuṇṭu *
vĕṟi ār kūntal * piṉṉai-pŏruṭṭu āṉ vĕṉṟāṉ ūr ** -
pŏṟi ār maññai * pūm pŏzhiltoṟum naṭam āṭa *
naṟu nāl̤malarmel * vaṇṭu icai pāṭum-naṟaiyūre-4

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1491. When he was a baby and stole and ate butter from the uri, the cowherdess Yashodā caught him and tied him to a mortar. He conquered the seven bulls to marry fragrant-haired Nappinnai. He stays in Thirunaraiyur where beautiful dotted peacocks dance in blooming groves and bees sing as they swarm around the fresh fragrant flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உறியார் உறியிலே வைத்த; வெண்ணெய் வெண்ணெயை; உண்டு வாரி உட்கொண்டு; உரலோடும் உரலோடு சேர்த்து; கட்டுண்டு கட்டப்பட்டவனும்; வெறியார் மணம் மிக்க; கூந்தல் கூந்தலையுடைய; பின்னை நப்பின்னையின்; பொருட்டு பொருட்டு; ஆன் ஏழு எருதுகளை; வென்றான் ஊர் வென்றவன் இருக்கும் ஊர்; பொறியார் மஞ்ஞை புள்ளி மயில்கள்; பூம் பொழில் தோறும் பூஞ்சோலைகளெங்கும்; நடம் ஆட வண்டு நடனம் ஆட வண்டுகள்; நறு மணம்மிக்க; நாண்மலர் மேல் அப்போதலர்ந்த பூக்களிலே; இசை பாடும் இசை பாடும்; நறையூரே திருநறையூராகும்