PT 6.5.10

திருமாலின் துணை கிடைக்கும்

1497 தாமத்துளப நீண்முடிமாயன்தான்நின்ற *
நாமத்திரள்மாமாளிகைசூழ்ந்த நறையூர்மேல் *
காமக்கதிர்வேல்வல்லான் கலியனொலிமாலை *
சேமத்துணையாம் செப்புமவர்க்குத்திருமாலே. (2)
1497 ## tāmat tul̤apa * nīl̤ muṭi māyaṉ-tāṉ niṉṟa *
nāmat tiral̤ mā māl̤ikai cūzhnta * naṟaiyūrmel **
kāmak katir vel vallāṉ * kaliyaṉ ŏli mālai * -
cemat tuṇai ām * cĕppum-avarkku tirumāle-10

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1497. Kaliyan, the poet with a beautiful shining spear, composed a garland of ten musical pāsurams on the god of Thirunaraiyur surrounded with large famous palaces. If devotees recite these pāsurams Thirumāl will save them and be their help.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமத் துளப திருத்துழாய் மாலை; நீள் முடி அணிந்தவனான; மாயன் தான் மாயன்; நின்ற இருக்குமிடமான; நாம புகழ்பெற்ற; திரள் திரள் திரளான; மா மாளிகை பெரிய மாளிகைகளால்; சூழ்ந்த சூழ்ந்த; நறையூர்மேல் திருநறையூரைக் குறித்து; காமக் கதிர் மிக்க ஒளியுள்ள; வேல் வல்லான் வேல் வல்லவரான; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த சொல்மாலையான; செப்பும் அவர்க்கு இப்பாசுரங்களை ஓத வல்லார்க்கு; திருமாலே சேமத் திருமாலே எப்போதும்; துணையாம் துணையாவான்