PT 5.8.7

சாந்தீபினிக்கு அருள் புரிந்தவன்

1424 ஓதுவாய்மையும்உவனியப்பிறப்பும்
உனக்குமுன்தந்தஅந்தணனொருவன் *
காதலென்மகன்புகலிடம்காணேன் *
கண்டுநீதருவாயெனக்குஎன்று *
கோதில்வாய்மையினான்உனைவேண்டிய
குறைமுடித்துஅவன்சிறுவனைக்கொடுத்தாய் *
ஆதலால்வந்துஉன்னடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!
PT.5.8.7
1424 otu vāymaiyum uvaṉiyap piṟappum *
uṉakku muṉ tanta antaṇaṉ ŏruvaṉ *
kātal ĕṉ makaṉ pukal iṭam kāṇeṉ *
kaṇṭu nī taruvāy ĕṉakku ĕṉṟu **
kotu il vāymaiyiṉāṉ uṉai veṇṭiya *
kuṟai muṭittu avaṉ ciṟuvaṉaik kŏṭuttāy * -
ātalāl vantu uṉ aṭi-iṇai aṭainteṉ * -
aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-7

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1424. A faultless Brahmin Sandipani who taught the Vedās to all and put the sacred thread on you lost his own son. When he worshiped you and cried, “I lost my dear son. Find him and bring him to me, ” you found his son and gave him to the Brahmin. I heard about that and have come to you to worship your feet. You are my refuge, O god of Thiruvarangam surrounded by beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓது கற்பிக்கப்படுகிற; வாய்மையும் வசன ரூபமான வேதத்தையும்; உவனியப் உபனயநத்துக்குப் பின்; பிறப்பும் வரும் மறுபிறப்பையும்; உனக்கு முன் உனக்கு முதலிலே; தந்த கொடுத்த; கோது இல் குற்றமற்றவனான; வாய்மையினான் வசனத்தையுடைய; அந்தணன் ஸாந்தீபினீ என்னும் அந்தணன்; ஒருவன் ஒருவன்; காதல் என் மகன் என் அன்பு மகன்; புகல் இடம் போன இடத்தை; காணேன் நான் அறியேன்; நீ எல்லாமறிந்தவனான நீ; கண்டு கண்டுபிடித்து; தருவாய் எனக்கு எனக்குத் தருவாய்; என்று என்று சொல்லி; உனை உன்னைக் குறித்து; வேண்டிய கேட்டுக் கொண்ட; குறை அவன் அவன் குறையை; முடித்து தீர்த்து; கொடுத்தாய் கொடுத்தாய்; ஆதலால் ஆதலால் சர்வ சக்தனான; வந்து உன் உன்னை நான் வந்து; அடியிணை உன் பாதங்களில்; அடைந்தேன் சரணம் அடைந்தேன்; அணி பொழில் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!