PT 5.8.3

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் அரங்கன்

1420 கடிகொள்பூம்பொழில்காமருபொய்கை
வைகுதாமரைவாங்கியவேழம் *
முடியும்வண்ணம்ஓர்முழுவலிமுதலை
பற்ற மற்றதுநின்சரண்நினைப்ப *
கொடியவாய்விலங்கின்னுயிர்மலங்கக்
கொண்டசீற்றமொன்றுண்டுளதறிந்து * உன்
அடியனேனும்வந்துஅடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!
PT.5.8.3
1420 kaṭi kŏl̤ pūm pŏzhil kāmaru pŏykai *
vaiku tāmarai vāṅkiya vezham *
muṭiyum vaṇṇam or muzhu vali mutalai
paṟṟa * maṟṟu atu niṉ caraṇ niṉaippa **
kŏṭiya vāy vilaṅkiṉ uyir malaṅkak *
kŏṇṭa cīṟṟam ŏṉṟu uṇṭu ul̤atu aṟintu * uṉ
aṭiyaṉeṉum vantu aṭi-iṇai aṭainteṉ *
aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-3

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1420. When Gajendra the elephant worshipped you with a lotus flower that bloomed in a lovely pond in a grove full of fragrant flowers and a strong crocodile caught his feet, he thought of you as his refuge and called to you in pain. Enraged at the cruel crocodile with its evil mouth, you destroyed it. I understand that you can become angry even to that extent to save your devotees. I have come to you as my refuge and worship you O god of Thiruvarangam surrounded by beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடி கொள் மணம் மிக்க; பூம் பொழில் சோலைகளால் சூழ்ந்த; காமரு கவர்ச்சிகரமான; பொய்கை பொய்கையில்; வைகு தாமரை இருக்கும் தாமரைப்பூவை; வாங்கிய வேழம் பறித்த யானையை; முடியும் வண்ணம் தன் சாபம் முடியும் வண்ணம்; ஓர் முழு ஓரு பூர்ண; வலி முதலை பலமுடைய முதலை; பற்ற மற்று பற்ற மேலும்; அது அந்த யானையனது; நின் உன்னை; சரண் நினைப்ப சரணமடைய; கொடிய கொடிய; உயிர் மலங்க உயிர் போகும்படி உனக்கு; கொண்ட சீற்றம் ஒன்று கடும் கோபம்; உண்டு உண்டானது; உளது அறிந்து அந்த கோபத்தை அறிந்த; உன் அடியனேனும் உன் பக்தனான; வந்து நான் வந்து; நின் அடியிணை உன் பாதங்களில்; அடைந்தேன் சரணமடைந்தேன்; அணி பொழில் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!