PT 5.3.7

இராவணனை அழித்தவனே! எனக்கு அருள் புரி

1374 ஆறினோடொருநான்குடைநெடுமுடி அரக்கன்தன் சிரமெல்லாம் *
வேறுவேறுகவில்லதுவளைத்தவனே! எனக்குஅருள்புரியே *
மாறில்சோதியமரதகப்பாசடைத் தாமரைமலர்வார்ந்த *
தேறல்மாந்திவண்டுஇன்னிசைமுரல திருவெள்ளறை நின்றானே!
PT.5.3.7
1374 āṟiṉoṭu ŏru nāṉku uṭai nĕṭu muṭi *
arakkaṉ-taṉ ciram ĕllām *
veṟu veṟu uka vil-atu val̤aittava
ṉe! * -ĕṉakku arul̤puriye ** -
māṟu il cotiya maratakap pācaṭait *
tāmarai malar vārnta *
teṟal mānti vaṇṭu iṉ icai mural * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-7

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1374. You who bent your bow and cut down the ten heads of the Rākshasa Rāvana adorned with long crowns stay in Thiruvellarai where bees sing sweetly drinking honey from flourishing lotus flowers with green emerald-like leaves. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு இல் சோதிய ஒப்பற்ற ஒளியையும்; மரதகப் மரதகம் போன்ற; பாசடை பச்சிலைகளையுமுடைய; தாமரை மலர் தாமரை மலர்களிலுள்ள; வார்ந்த தேறல் பெருகும் தேனை; மாந்தி வண்டு சுவைத்த வண்டுகளின்; இன்னிசை இனிய இசையை; முரல் ரீங்காரம் பண்ணும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; அரக்கன் தன் இராவணனின்; நெடு முடி உடை நீண்ட கிரீடங்களையுடைய; ஆறினோடு பத்துத்; ஒரு நான்கு தலைகளையும்; வேறு வேறு தனித்தனியே; உக அற்று விழும்படி; வில் அது வில்லை; வளைத்தவனே! வளைத்தவனே!; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்