PT 5.3.4

திருவேங்கடமுடையானே! திருவருள் தா

1371 வாம்பரியுகமன்னர்தம்உயிர்செக ஐவர்க்கட்குஅரசளித்த *
காம்பினார்த்திருவேங்கடப்பொருப்ப! நின்காதலைஅருள் எனக்கு *
மாம்பொழில்தளிர்கோதியமடக்குயில் வாயது துவர்ப்பெய்த *
தீம்பலங்கனித்தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!
PT.5.3.4
1371 vām pari uka maṉṉar-tam uyir cĕka *
aivarkaṭku aracu al̤itta *
kāmpiṉ ār tiru veṅkaṭap pŏruppa! * -niṉ
kātalai arul̤ ĕṉakku ** -
mām pŏzhil tal̤ir kotiya maṭak kuyil *
vāy-atu tuvarppu ĕyta *
tīm palaṅkaṉit teṉ-atu nukar * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-4

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1371. You, the god of the Thiruvenkatam hills filled with bamboo, who drove the chariot for Arjunā in the Bhārathā war and helped him conquer the Kauravās with galloping horses, and gave their kingdom to the five Pāndavās stay in Thiruvellarai where the beautiful cuckoo plucks pollen from the flowers of the mango trees and then, to take away the sour taste, drinks the honey-like juice of sweet jackfruit. Give us your loving grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாம் பொழில் மாந்தோப்புகளில்; தளிர் இருக்கும் தளிர்களை; கோதிய கொத்தி உண்ட அழகிய; மட குயில் பெண் குயில்கள்; வாய் அது தங்கள் வாய்; துவர்ப்பு எய்த துவர்த்துப்போக; தீம் இனிமையான; பலங்கனி பலாப் பழங்களிலுள்ள; தேன் அது நுகர் தேனைச் சுவைக்கும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; வாம் பாரதப்போரில்; பரி உக குதிரைகள் மாள; மன்னர் தம் உயிர் செக அரசர்கள் அழிய; ஐவர்கட்கு பஞ்சபாண்டவர்களுக்கு; அரசளித்த ராஜ்யம் அளித்தவனும்; காம்பின் ஆர் மூங்கில்களாலே நிறைந்த; திருவேங்கட திருமலையில்; பொருப்ப! இருப்பவனே!; நின் காதலை உன்னிடத்தில் பரம பக்தியை; அருள் எனக்கு எனக்கு தந்தருளவேணும்