PT 4.3.5

தசரதன் மகனை இக்கோயிலில் காணலாம்

1272 தீமனத்தரக்கர்திறலழித்தவனே!
என்று சென்றடைந்தவர்தமக்கு *
தாய்மனத்திரங்கிஅருளினைக்கொடுக்கும்
தயரதன்மதலையை, சயமே *
தேமலர்ப்பொழில்சூழ்நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
காமனைப்பயந்தான்தன்னைநானடியேன்
கண்டுகொண்டுய்ந்தொழிந்தேனே.
PT.4.3.5
1272 tī maṉattu arakkar tiṟal azhittavaṉe
ĕṉṟu * cĕṉṟu aṭaintavar-tamakku *
tāy maṉattu iraṅki arul̤iṉaik kŏṭukkum *
tayarataṉ matalaiyai cayame **
te malarp pŏzhil cūzh nāṅkai nal naṭuvul̤ *
cĕm pŏṉ cĕy koyiliṉul̤l̤e *
kāmaṉaip payantāṉ-taṉṉai-nāṉ aṭiyeṉ *
kaṇṭukŏṇṭu uyntŏzhinteṉe-5

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1272. I saw him, the father of Kāma, the son of Dasaratha who gives his grace to his devotees like a loving mother to her child if they worship him saying, “You, the heroic one, destroyed the evil-minded Rākshasas. ” - He stays in Chemponseykoyil in Nāngai surrounded by groves blooming with flowers that drip honey. I am his slave and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீ மனத்து தீய நெஞ்சையுடைய; அரக்கர் அரக்கர்களின்; திறல் அழித்தவனே! பலத்தை அழித்தவனே!; என்று சென்று என்று சொல்லிக் கொண்டு; அடைந்தவர் தமக்கு வந்தவர்க்கு; தாய் மனத்து தாயைப்போல்; இரங்கி கரைந்து இரங்கி; அருளினை அருளைக்; கொடுக்கும் கொடுக்கும்; தயரதன் தசரதன்; மதலையை புதல்வனான ராமனை; காமனை பிரத்யும்னனை; பயந்தான் தன்னை படைத்தவனுமானவனை; சயமே ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும்; தே மலர் தேன்நிறைந்த புஷ்பங்களையுடைய; பொழில் சூழ் சோலைகளாலே சூழ்ந்த; நாங்கை நல் நடுவுள் திருநாங்கூரின் நடுவிலே; செம்பொன்செய் செம்பொன் செய் என்னும்; கோயிலின்உள்ளே கோயிலின் உள்ளே; நான் அடியேன் அடியேனான நான்; கண்டு கொண்டு அவனைப் பார்த்து அனுபவித்து; உய்ந்தொழிந்தேனே வாழ்ந்தேன்
thī evil; manaththu having mind; arakkar demons-; thiṛal strength; azhiththavanĕ oh one who destroyed!; enṛu saying this; senṛu reached; adaindhavar thamakku for those who surrendered, being refugeless; thāy manaththu like mother-s heart; irangi melted; arul̤inai mercy; kodukkum showering; dhayaradhan dhaṣaratha-s; madhalaiyai being the one who became the son; kāmanai manmatha (cupid); payandhān thannai sarvĕṣvaran who gave birth to; sayam being surrounded as a bunch; thĕ filled with honey; malar having flowers; pozhil gardens; sūzh surrounded by; nāngai in thirunāngūr; nal naduvul̤ present in the good central location; sem pon sey kŏyilin ul̤l̤ĕ in the dhivyadhĕṣam named sembonsey kŏyil; adiyĕn your servitor,; nān ī; kaṇdu koṇdu enjoyed with my eyes; uyndhu enlivened; ozhindhĕn became satisfied