PT 4.3.2

வானவர்கோன் வாழ்விடம் இக்கோயில்

1269 பிறப்பொடுமூப்பொன்றில்லவன்தன்னைப்
பேதியாஇன்பவெள்ளத்தை *
இறப்பெதிர்காலக்கழிவுமானானை
ஏழிசையின்சுவைதன்னை *
சிறப்புடைமறையோர்நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
மறைப்பெரும்பொருளைவானவர்கோனைக்
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
PT.4.3.2
1269 piṟappŏṭu mūppu ŏṉṟu illavaṉ-taṉṉaip *
petiyā iṉpa vĕl̤l̤attai *
iṟappu ĕtir kālam kazhivum āṉāṉai *
ezh icaiyiṉ cuvai-taṉṉai **
ciṟappu uṭai maṟaiyor nāṅkai nal naṭuvul̤ *
cĕmpŏṉcĕykoyiliṉul̤l̤e *
maṟaip pĕrum pŏrul̤ai vāṉavar-koṉai *
kaṇṭu nāṉ vāzhntŏzhinteṉe-2

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1269. The king of the gods in the sky, who is the wonderful meaning of the divine Vedās, without birth, old age, past, present or future, the sweet taste of the seven kinds of music and a flood of joy that cannot be stopped stays in Chemponseykoyil in Nāngai where the Vediyars, skilled in the Vedās, live. I saw him and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறப்பொடு பிறப்பு; மூப்பு ஒன்று மூப்பு எதுவும்; இல்லவன் தன்னை இல்லாதவனாய்; பேதியா என்றும் ஒரே மாதிரியான; இன்ப வெள்ளத்தை ஆநந்தமுடையவனாய்; இறப்பு எதிர் காலம் நிகழ்காலம் எதிர்காலம்; கழிவும் இறந்தகாலம் என்று எல்லா; ஆனானை காலத்திலும் இருப்பவனாய்; ஏழ் இசையின் ஸப்தஸ்வரங்களின்; சுவை தன்னை சுவையானவனாய்; மறைப் பெரும் வேதங்களின்; பொருளை பொருளாயிருப்பவனாய்; வானவர் நித்யஸூரிகளின்; கோனை தலைவனான எம்பெருமானை; சிறப்பு உடை சிறந்த; மறையோர் வைதிகர்கள் வாழ்கிற; நாங்கை நல் நடுவுள் திருநாங்கூரின் நடுவிலே; செம்பொன்செய் செம்பொன் செய்கோயில் என்னும்; கோயிலின் உள்ளே கோயிலின் உள்ளே; கண்டு நான் அவனைப் பார்த்து அனுபவித்து; வாழ்ந்தொழிந்தேனே வாழ்ந்தேன்
piṛappodu Birth; mūppu old-age (and other changes); onṛu even a little bit; illavan thannai being the one who is not having; bĕdhiyā not having differences such as inequality etc (and being the same at all times); inba vel̤l̤aththai being the firm abode of bliss like an ocean; iṛappu in past; edhir kālam in future; kazhivum and in present (in all three times); ānānai one being present; ĕzh isaiyin saptha svara-s (seven tunes-); suvai thannai being enjoyable like the taste; maṛai revealed by vĕdham; perum porul̤ai important principle; vānavar kŏnai sarvĕṣvaran who is the leader of nithyasūris; siṛappu udai maṛaiyŏr eternally inhabited by best among the brāhmaṇas who have greatness; nāngai in thirunāngūr; nal naduvul̤ present in the good central location; sem pon sey kŏyilin ul̤l̤ĕ in the dhivyadhĕṣam named sembonsey kŏyil; kaṇdu koṇdu enjoyed with my eyes; vāzhndhu enlivened; ozhindhĕn became satisfied