Chapter 6

Thiruvāli 2 - (தூ விரிய)

திருவாலி 2
Thiruvāli 2 - (தூ விரிய)
Even though the Lord resided in his heart, the āzhvār longed to experience Him directly. Due to his unbearable separation, the āzhvār assumed the role of the goddess and expressed his state of longing.
பகவான், தம் மனத்தில் வந்து தங்கியிருந்தாலும் அவனை நேருக்கு நேர் கலந்து அனுபவிக்க ஆசைப்பட்டார் ஆழ்வார். பிரிவாற்றாமை காரணமாகப் பிராட்டியின் நிலையடைந்து தம் நிலையைத் தெரிவிக்கிறார்.
Verses: 1198 to 1207
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 3.6.1
    1198 ## தூ விரிய மலர் உழக்கித் * துணையோடும் பிரியாதே *
    பூ விரிய மது நுகரும் * பொறி வரிய சிறு வண்டே **
    தீ விரிய மறை வளர்க்கும் * புகழ் ஆளர் திருவாலி *
    ஏ வரி வெம் சிலையானுக்கு * என் நிலைமை உரையாயே 1
  • PT 3.6.2
    1199 பிணி அவிழு நறு நீல * மலர் கிழியப் பெடையோடும் *
    அணி மலர்மேல் மது நுகரும் * அறு கால சிறு வண்டே **
    மணி கழுநீர் மருங்கு அலரும் * வயல் ஆலி மணவாளன்
    பணி அறியேன் * நீ சென்று * என் பயலை நோய் உரையாயே 2
  • PT 3.6.3
    1200 நீர் வானம் மண் எரி கால் ஆய் * நின்ற நெடுமால் * தன்
    தார் ஆய நறுந் துளவம் * பெறும் தகையேற்கு அருளானே **
    சீர் ஆரும் வளர் பொழில் சூழ் * திருவாலி வயல் வாழும் *
    கூர் வாய சிறு குருகே * குறிப்பு அறிந்து கூறாயே 3
  • PT 3.6.4
    1201 தானாக நினையானேல் * தன் நினைந்து நைவேற்கு * ஓர்
    மீன் ஆய கொடி நெடு வேள் * வலி செய்ய மெலிவேனோ? **
    தேன் வாய வரி வண்டே * திருவாலி நகர் ஆளும் *
    ஆன் ஆயற்கு என் உறு நோய் * அறியச் சென்று உரையாயே 4
  • PT 3.6.5
    1202 வாள் ஆய கண் பனிப்ப * மென் முலைகள் பொன் அரும்ப *
    நாள் நாளும் * நின் நினைந்து நைவேற்கு * ஓ மண் அளந்த
    தாளாளா தண் குடந்தை நகராளா * வரை எடுத்த
    தோளாளா * என் தனக்கு ஓர் * துணையாளன் ஆகாயே 5
  • PT 3.6.6
    1203 தார் ஆய தன் துளவ * வண்டு உழுதவரை மார்பன் *
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த * புள் பாகன் என் அம்மான் **
    தேர் ஆரும் நெடு வீதித் * திருவாலி நகர் ஆளும் *
    கார் ஆயன் என்னுடைய * கன வளையும் கவர்வானோ? 6
  • PT 3.6.7
    1204 கொண்டு அரவத் திரை உலவு * குரை கடல்மேல் குலவரைபோல் *
    பண்டு அரவின் அணைக் கிடந்து * பார் அளந்த பண்பாளா **
    வண்டு அமரும் வளர் பொழில் சூழ் * வயல் ஆலி மைந்தா * என்
    கண் துயில் நீ கொண்டாய்க்கு * என் கன வளையும் கடவேனோ? 7
  • PT 3.6.8
    1205 குயில் ஆலும் வளர் பொழில் சூழ் * தண் குடந்தைக் குடம் ஆடி *
    துயிலாத கண் இணையேன் * நின் நினைந்து துயர்வேனோ? **
    முயல் ஆலும் இள மதிக்கே * வளை இழந்தேற்கு * இது நடுவே
    வயல் ஆலி மணவாளா * கொள்வாயோ மணி நிறமே? 8
  • PT 3.6.9
    1206 நிலை ஆளா நின் வணங்க * வேண்டாயே ஆகிலும் * என்
    முலை ஆள ஒருநாள் * உன் அகலத்தால் ஆளாயே **
    சிலையாளா மரம் எய்த திறல் ஆளா * திருமெய்ய
    மலையாளா * நீ ஆள வளை ஆள மாட்டோமே 9
  • PT 3.6.10
    1207 ## மை இலங்கு கருங் குவளை * மருங்கு அலரும் வயல் ஆலி *
    நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை * நெடுமாலை **
    கை இலங்கு வேல் கலியன் * கண்டு உரைத்த தமிழ் மாலை *
    ஐ இரண்டும் இவை வல்லார்க்கு * அரு வினைகள் அடையாவே 10