PT 2.7.3

பிரானே! என் மகள் உன் நினைவால் இளைத்தாள்

1110 சாந்தமும்பூணும் சந்தனக்குழம்பும்
தடமுலைக்குஅணியிலும்தழலாம் *
போந்தவெண்திங்கள்கதிர்சுடமெலியும்
பொருகடல்புலம்பிலும்புலம்பும் *
மாந்தளிர்மேனிவண்ணமும் பொன்னாம்
வளைகளும்இறைநில்லா * என்தன்
ஏந்திழையிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!
PT.2.7.3
1110 cāntamum pūṇum cantaṉak kuzhampum * taṭa mulaikku aṇiyilum tazhal ām *
ponta vĕṇ tiṅkal̤ katir cuṭa mĕliyum * pŏru kaṭal pulampilum pulampum **
mān tal̤ir meṉi vaṇṇamum pŏṉ ām * val̤aikal̤um iṟai nillā * ĕṉ-taṉ
entizhai ival̤ukku ĕṉ niṉaintu iruntāy? * iṭavĕntai ĕntai pirāṉe-3

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1110. Her mother says, “If my daughter wears sandal paste (mixture of saffron, musk and sandal paste) and pearl garlands on her round breasts, they burn her. The white moon that rises in the evening sheds hot rays and makes her weak. When she hears the sound of the roaring waves of the ocean she prattles and prattles, her beautiful body that has the color of a mango shoot becomes pale and her bangles grow loose and fall from her hands. What do you think of that beautiful girl decorated with precious ornaments, O father, lord of Thiruvidaventhai?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சாந்தமும் பூணும் சந்தனமும் முத்துமாலையும்; சந்தனக் குழம்பும் சந்தனக் குழம்பும்; தடமுலைக்கு மார்பகங்களில்; அணியிலும் அணிந்து கொண்டாலும்; தழல் ஆம் அனைத்தும் நெருப்பாக இருக்கிறது; போந்த தோன்றும்; வெண் திங்கள் வெளுத்த சந்திரனின்; கதிர் சுட கிரணங்கள் தஹிக்க; மெலியும் துன்பமடைந்து மெலிந்தாள்; பொரு கடல் அலை எறிகிற கடலானது; புலம்பிலும் கோஷம் எழுப்பினால்; புலம்பும் இவளும் கூக்குரலிட்டாள்; மாந் தளிர் மேனி மாந்தளிர் போன்ற மேனியின்; வண்ணமும் நிறம்; பொன் ஆம் பசலைநிறமாக மாறிவிட்டது; வளைகளும் இறை வளைகளும் கைகளில்; நில்லா நிற்கவில்லை; ஏந்திழை ஆபரணமணிந்த; என் தன் எனது பெண்பிள்ளையாகிய; இவளுக்கு இவள் விஷயத்திலே; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; என் நினைந்து இருந்தாய்? என்ன செய்வதாக நினைக்கிறீர்?
sāndhamum sandalwood paste mixed with other fragrant materials; pūṇum pearl necklace; sandhanak kuzhambum sandalwood fluid; thadam mumlaikku on the huge bosom; aṇiyilum though applied; thazhalām it burns like fire;; pŏndha appeared; vel̤ white; thingal̤ moon-s; kadhir suda as the rays burn; meliyum she suffered (due to that);; poru rising waves; kadal ocean; pulambil when it makes noise; pulambum she also calls out;; māndhal̤ir like mango spruce; mĕni divine form-s; vaṇṇamum colour; ponnām becoming pale;; val̤aigal̤um bangles; iṛai even little bit; nillā not remaining;; enṛan my; ĕndhu worn; izhai having ornament; ival̤ukku for her; en ninaindhirundhāy what are you thinking?; idavendhai having arrived in thiruvidavendhai; endhai pirānĕ ŏh lord of my clan!; sollu ẏou should mercifully speak a word.