PT 2.5.6

வராகாவதாரம் எடுத்தவன் வாழ்விடம் கடல்மல்லை

1093 கிடந்தானைத்தடங்கடலுள் பணங்கள்மேவிக்
கிளர்பொறியமறிதிரியஅதனின்பின்னே
படர்ந்தானை * படுமதத்தகளிற்றின்கொம்பு
பறித்தானைப் பாரிடத்தைஎயிறுகீற
இடந்தானை * வளைமருப்பின்ஏனமாகி
இருநிலனும் பெருவிசும்பும்எய்தாவண்ணம்
கடந்தானை * எம்மானைக்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
PT.2.5.6
1093 kiṭantāṉai taṭaṅ kaṭalul̤ paṇaṅkal̤ mevik * kil̤ar pŏṟiya maṟi tiriya ataṉiṉ piṉṉe
paṭarntāṉai * paṭu matatta kal̤iṟṟiṉ kŏmpu paṟittāṉaip * pār iṭattai ĕyiṟu kīṟa
iṭantāṉai ** val̤ai maruppiṉ eṉam āki * iru nilaṉum pĕru vicumpum ĕytā vaṇṇam
kaṭantāṉai ĕmmāṉaik kaṇṭukŏṇṭeṉ * kaṭi pŏzhil cūzh kaṭalmallait talacayaṉatte-6

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1093. Our lord, my father who rests on many-headed Adisesha on the ocean, broke the tusks of the elephant Kuvalayābeedam, took the form of a boar with curving tusks, split open the underworld and brought the earth goddess up, and measured the earth and the sky with his two feet at Mahābali’s sacrifice. He stays in Kadalmallai Thalasayanam surrounded with thick groves and I saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடம் விசாலமான; கடலுள் திருப்பாற் கடலிலே; பணங்கள் ஆதிசேஷனின் படங்களின்; மேவி கீழே பொருந்தி; கிடந்தானை சயனித்திருப்பவனும்; கிளர் கிளர்ந்த மாரிசனென்னும்; பொறிய மறி மாயமான புள்ளிமான்; திரிய திரிய; அதனின் பின்னே அதன் பின்னே; படர்ந்தானை தொடர்ந்து சென்றவனும் (ராமாவதாரம்); படு மதத்த மதஜலத்தையுடைய; களிற்றின் குவலயாபீடமென்னும் யானையின்; கொம்பு கொம்பை; பறித்தானை முறித்தவனும் (கிருஷ்ணாவதாரம்); வளை வளைந்த; மருப்பின் கோரைப்பற்களையுடைய; ஏனம் ஆகி வராஹ அவதாரம் எடுத்து; பார் இடத்தை விசாலமான பூமியை; எயிறு கீற பற்களாலே கிழியும்படி கீறி; இடந்தானை விடுவித்தவனும்; இரு நிலனும் விசாலமான பூமியும்; பெரு விசும்பும் பெரிய ஆகாசமும்; எய்தா வண்ணம் போறாதென்னும்படி வளர்ந்து; கடந்தானை உலகளந்தவனுமான (திருவிக்கிரம அவதாரம்); எம்மானை எம்பெருமானை; கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டது; கடி மணம்மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல் மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
thadam vast; kadalul̤ in thiruppāṛkadal (milk ocean); paṇangal̤ under the hoods of ādhiṣĕshan; mĕvi remaining firm; kidandhānai one who mercifully rested; kil̤ar cheerfully; poṛiya having dots in many colours; maṛi fawn; thiriya as it roams around here and there; adhanin pinnĕ behind it; padarndhānai one who went; padu flowing; madhaththa having water of exultation; kal̤iṝin kuvalayāpīdam-s (elephant); kombu tusk; paṛiththānai one who plucked and threw; val̤ai curved; maruppin having horn; ĕnamāgi being varāha; idam pārai vast earth; eyiṛu with his divine tooth; kīṛa to tear; idandhānai one who released it; iru nilanum the vast earth; peru visumbum the vast sky; eydhā vaṇṇam grew to become insufficient; kadandhānai one who measured the worlds with his divine feet and accepted; emmānai sarvĕṣvaran who enslaved me; kadi fragrant; pozhil by garden; sūzh surrounded; thalasayanaththu in sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nān kaṇdu koṇdĕn ī got to see