PT 2.4.6

நெடுமாலுக்கு இடம் திருநீர்மலை

1083 பாராருலகும்பனிமால்வரையும்
கடலும்சுடரும்இவையுண்டும் * எனக்கு
ஆராதெனநின்றவன்எம்பெருமான்
அலைநீருலகுக்கு அரசாகிய * அப்
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லைநுனக்கெனும்எல்லையினான் *
நீரார்பேரான்நெடுமாலவனுக்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே.
PT.2.4.6
1083 pār ār ulakum paṉi māl varaiyum * kaṭalum cuṭarum ivai uṇṭum * ĕṉakku
ārātu ĕṉa niṉṟavaṉ ĕm pĕrumāṉ * alai nīr ulakukku aracu ākiya ** ap
perāṉai muṉinta muṉikku araiyaṉ * piṟar illai nuṉakku ĕṉum ĕllaiyiṉāṉ *
nīr ār perāṉ nĕṭumāl-avaṉukku iṭam * mā malai āvatu-nīrmalaiye-6

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1083. Nedumal, the ocean-colored god, who swallowed the world, the high snow-filled mountains, the oceans, the sun and the moon and still felt hungry and quarreled with ParasuRāman, the matchless sage, the king of a huge land surrounded with oceans stays in the large Thiruneermalai hills and rests on Adisesha on the ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் ஆர் பிரளயகாலத்தில் பரந்த; உலகும் பூலோகமும்; பனி மால் குளிர்ந்த பெரிய; வரையும் மலைகளும்; கடலும் கடலும்; சுடரும் இவை சந்திர ஸூரியர்களும்; உண்டும் ஆகிய அனைத்தையும் உண்டும்; எனக்கு ஆராது எனக்கு போறாது; என நின்றவன் என நின்றவன்; எம் பெருமான் எம் பெருமான்; அலை நீர் கடல் சூழ்ந்த; உலகுக்கு உலகத்துக்கு; அரசு ஆகிய அரசர்களாகிய க்ஷத்ரிய குலத்தை; அப்பேரானை முனிந்த சீறிக்களைந்த; முனிக்கு அரையன் பரசுராம முனிவன்; பிறர் உனக்கு சமமாக சொல்ல; இல்லை நுனக்கு வேறு ஒருவன் இல்லை; எனும் எல்லையினான் என்னும்படியாக கூறிய; நீர் ஆர் நீர்வண்ணனென்னும்; பேரான் பெயருடைய; நெடுமால் அவனுக்கு சிறந்த பெருமானுக்கு; இடம் இருப்பிடமாவது; மா மலை ஆவது மா மலையான; நீர்மலையே நீர்மலையே
ār (during deluge) vast; pār ulagum earth; pani cool; māl huge; varaiyum mountains; kadalum oceans; sudarum moon and sun; ivai all of these; uṇdum consumed; enakku for me; ārādhu ena saying -not sufficient-; ninṛavan one who is mercifully present; emperumān being my lord; alai nīr surrounded by ocean where the waves are striking; ulagukku for the earth; arasu āgiya those who are known as kings; appĕrānai having that name of kshathriya clan; munindha one who mercifully showed anger; munikku araiyan being ṣrī paraṣurāmāzhwān who is best among sages; nunakku for you; piṛar illai there is none beyond you; enum to be said; ellaiyinān one who remains in the boundary of being the prakāri (substratum); nīrār pĕrān one who has the divine name, nīrvaṇṇan; nedumāl avanukku for sarvĕṣvaran who has great love; idam āvadhu the abode; best; malai hill; nīr malai thirunīrmalai