PT 11.6.8

பிரளயத்திலிருந்து காத்தவனையே கருதுக

2009 மறம்கிளர்ந்துகருங்கடல்நீர்
உரம்துரந்துபரந்தேறிஅண்டத்தப்பால் *
புறம்கிளர்ந்தகாலத்துப்
பொன்னுலகமேழினையும் ஊழில்வாங்கி *
அறம்கிளர்ந்ததிருவயிற்றின்
அகம்படியில்வைத்துஉம்மைஉய்யக்கொண்ட *
நிறம்கிளர்ந்தகருஞ்சோதிநெடுந்தகையை
நினையாதார்நீசர்தாமே.
2009 maṟam kil̤arnta karuṅ kaṭal nīr * uram turantu
parantu eṟi aṇṭattu appāl *
puṟam kil̤arnta kālattup * pŏṉ ulakam
ezhiṉaiyum ūzhil vāṅki **
aṟam kil̤anta tiru vayiṟṟiṉ * akampaṭiyil
vaittu ummai uyyakkŏṇṭa *
niṟam kil̤arnta karuñ coti * nĕṭuntakaiyai
niṉaiyātār nīcar-tāme

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2009. At the end of the eon, the worlds were covered with thick darkness and the oceans rose in a flood that spread over all the worlds. Our god swallowed all the seven golden worlds, kept them in his stomach and protected all. Any devotees who do not think of the dark shining lord are contemptible.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறம் கிளர்ந்து கொடிய; கருங் கடல் கருங் கடலின்; நீர் வெள்ளமானது; உரம் துரந்து வேகத்தோடு ஓடி; பரந்து ஏறி எங்கும் பரந்து; அண்டத்து அண்டகடாகத்திற்கு; அப்பால் அப்பால்; புறம் கிளர்ந்த வியாபித்த; காலத்து காலத்தில்; பொன் அழகிய சிறப்பான; உலகம் உலகங்கள்; ஏழினையும் ஏழினையும்; ஊழில் முறையாலே; வாங்கி வாரிப் பிடித்து; அறம் கிளர்ந்த தருமப்படி; திரு வயிற்றின் தன் திரு வயிற்றின்; அகம்படியில் உள்ளே; வைத்து உம்மை வைத்து உங்களை; உய்யக் கொண்ட காப்பாற்றிய; நிறம் கிளர்ந்த கருமை மிகுந்த; கருஞ்சோதி ஒளியுள்ள; நெடுந்தகையை எம்பெருமானை; நினையாதார் நினைக்காதவர்கள்; நீசர் தாமே இழிகுலத்தவரேயாவர்