PT 11.4.9

கண்ணன் கழலிணை தொழுக

1990 துணைநிலைமற்றெமக்கொருளதென்றிராது
தொழுமின்கள்தொண்டர்! தொலைய *
உணமுலைமுன்கொடுத்தஉரவோளதாவி,
உகவுண்டுவெண்ணெய்மருவி *
பணமுலையாயர்மாதர் உரலோடுகட்ட
அதனோடுமோடி, அடல்சேர் *
இணைமருதிற்றுவீழநடைகற்றதெற்றல்
வினைபற்றறுக்கும்விதியே.
1990 tuṇainilai maṟṟu ĕmakku or ul̤atu ĕṉṟu irātu *
tŏzhumiṉkal̤ tŏṇṭar tŏlaiya *
uṇa mulai muṉ kŏṭutta uravol̤atu āvi *
uka uṇṭu vĕṇṇĕy maruvi **
paṇai mulai āyar mātar uraloṭu kaṭṭa *
ataṉoṭum oṭi aṭal cer *
iṇai marutu iṟṟu vīzha naṭaikaṟṟa tĕṟṟal *
viṉai paṟṟu aṟukkum vitiye

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1990. O devotees, do not think there are other ways you can be helped and that you do not need him. Worship the lord who drank the milk from the breasts of Putanā and killed her. When he stole butter from the cowherd women and ate it, round-breasted Yashodā tied him to a mortar, but he pulled the mortar after him and walked between two marudu trees and knocked them down, killing the two Rākshasas who had taken their form. He is our refuge and he takes away the results of our bad karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டர்! தொண்டர்களே!; எமக்கு மற்று நமக்கு வேறு ஒரு; துணைநிலை துணை; ஓர் உளது என்று உண்டு என்று; இராது நினைத்திராமல்; தொழுமின்கள் எம்பெருமானை வணங்குங்கள்; தொலைய முன்பு கண்ணனை முடிக்கக் கருதி; உண முலை முன் உண்ண விஷப் பாலை; கொடுத்த கொடுத்த; உரவோளது வஞ்சனையுடைய; ஆவி பூதனையின் உயிர்; உக உண்டு மாளும்படி உண்டவனும்; வெண்ணெய் வெண்ணெயை; மருவி விரும்பி களவு செய்ய; பண முலை பருத்த ஸ்தனங்களையுடைய; ஆயர் மாதர் யசோதையானவள்; உரலோடு கட்ட உரலோடு கட்ட; அடல் சேர் மிடுக்கையுடைய கண்ணன்; அதனோடும் ஓடி அதனோடும் ஓடி; இணை மருது இரட்டை மருதமரங்கள்; இற்று வீழ முறிந்து விழும்படி; நடை கற்ற நடை பயின்ற; தெற்றல் தெளிவுள்ள சிறுகுழந்தை; வினை பற்று நமது பாபங்களை வேருடன்; அருக்கும் போக்கி அருள்வான்; விதியே என்பது உறுதியே