PT 11.4.8

அன்னமாகி அறநூல் உரைத்தவனே காப்பான்

1989 முன்னுலகங்களேழும்இருள்மண்டியுண்ண
முதலோடுவீடுமறியாது *
என்னிது? வந்ததென்னஇமையோர்திசைப்ப
எழில்வேதமின்றிமறைய *
பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கி
இருள்தீர்ந்திவ்வையம்மகிழ *
அன்னமதாயிருந்துஅங்கறநூலுரைத்த
அதுநம்மையாளுமரசே.
1989 muṉ ulakaṅkal̤ ezhum irul̤maṇṭi uṇṇa *
mutaloṭu vīṭum aṟiyātu *
ĕṉ itu vantatu? ĕṉṉa imaiyor ticaippa *
ĕzhil vetam iṉṟi maṟaiya **
piṉṉum vāṉavarkkum muṉivarkkum nalki *
irul̤ tīrntu iv vaiyam makizha *
aṉṉam-atu āy iruntu aṅku aṟanūl uraitta *
atu nammai āl̤um arace

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1989. The world grew dark at the end of the eon in ancient times. The divine Vedās disappeared and the gods were shocked and did not know where their worlds had gone. He took the form of a swan, removed the darkness of the world and taught the Vedās to the sages and removed the ignorance of the world. The lord always gives his grace to the gods and all others.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பொருசமயம்; உலகங்கள் ஏழும் உலகங்கள் ஏழும்; இருள் அஞ்ஞான இருளில்; மண்டி வியாபித்திருப்பதை; உண்ண பார்த்து; இமையோர் தேவர்கள்; முதலோடு வீடும் ஆதியும் அந்தமும்; அறியாது அறியாமல்; என் இது திடீரென்று; வந்தது இப்படி ஆக; என்ன என்ன காரணம் என்று; திசைப்ப திகைக்க; எழில் வேதம் அழகிய வேதங்கள்; இன்றி மதுகைடபர்களால் அபகரிக்கப்பட; மறைய மறைந்து போக; பின்னும் மீண்டும்; அன்னம் அது ஆய் ஹம்ஸரூபியாய்; இருந்து அங்கு அவதரித்து; வானவர்க்கும் தேவர்களுக்கும்; முனிவர்க்கும் முனிவர்களுக்கும்; நல்கி தேடிக்கொடுத்து; இருள் தீர்ந்து இருளிலிருந்து விடுபட்டு; இவ் வையம் மகிழ உலகம் மகிழ; அறநூல் வேத சாஸ்திரங்களை; உரைத்த அருளிச்செய்த; அது நம்மை அந்தப் பெருமானே நம்மை; ஆளும் அரசே ரக்ஷித்து ஆளும் அரசு