PT 11.4.7

இராமபிரானே நமக்கு அரண்

1988 இலைமலிபள்ளியெய்தியிதுமாயமென்ன
இனமாயமான்பின், எழில்சேர் *
அலைமலிவேற்கணாளை அகல்விப்பதற்கு
ஓருருவாயமானையமையா *
கொலைமலியெய்துவித்தகொடியோனிலங்கை
பொடியாக, வென்றியமருள் *
சிலைமலிசெஞ்சரங்கள்செலவுய்த்த நங்கள்
திருமால்நமக்குஓரரணே.
1988 ilai mali pal̤l̤i ĕyti itu māyam ĕṉṉa *
iṉam āya māṉ piṉ ĕzhil cer *
alai mali velkaṇāl̤ai akalvippataṟku *
or uru āya māṉai amaiyā **
kŏlai mali ĕytuvitta kŏṭiyoṉ ilaṅkai *
pŏṭi āka vĕṉṟi amarul̤ *
cilai mali cĕñ caraṅkal̤ cĕla uytta naṅkal̤ *
tirumāl namakku or araṇe

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1988. As Rāma in the forest, he chased the Rākshasa Marisan who came as a golden deer to delight Sita whose sharp eyes were like spears, and he killed it. When Sita was kidnapped by Rāvana he went to Lankā, killed the Rākshasas, shattered Lankā into pieces, and, shooting his powerful arrows with his bow, defeated Rāvana. He, our Thirumāl, is our refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலை மலி பள்ளி பர்ணசாலையின் அருகே; எய்தி வந்து; அலை மலி அலையும் மான்; வேல் வேல் போன்ற; கணாளை கண்களையுடைய ஸீதாதேவியை; அகல்விப்பதற்கு பிரிப்பதற்கு; மான் பின் மற்ற மான்களின் பின்னே; இது மாயம் இது மாயமான்; என்ன என்று சொல்லும்படி; இனம் ஆய திரளாக வந்த; எழில் சேர் அழகையுடையதாய்; ஓர் விலக்ஷணமான; உரு ஆய ரூபத்தோடு இருந்த; மானை அமையா மானைக் கொன்று; கொலை மலி கொலை உணர்வையே; எய்துவித்த ஸ்வபாவமாக வளர்த்து வந்த; கொடியோன் கொடியவனின்; இலங்கை இலங்கையை; பொடி ஆக பொடிப் பொடி ஆக ஆக்க; வென்றி வெற்றியை விளைவிக்கக்கூடிய; அமருள் போர்க்களத்தில்; சிலை மலி வில்லிலே நிறைந்த; செஞ்சரங்கள் செஞ்சரங்களை; செல உய்த்த பிரயோகித்த; நங்கள் திருமால் நம் எம்பெருமான்; நமக்கு நமக்கு; ஓர் அரணே ஒப்பற்ற சரண்யன்