PT 11.4.1

மீனாகிய பெருமானை மறவாது அறைஞ்சுக

1982 நிலையிடமெங்குமின்றிநெடுவெள்ளம் உம்பர்
வளநாடுமூடஇமையோர் *
தலையிடமற்றெமக்குஓர்சரணில்லையென்ன
அரணாவனென்னு அருளால் *
அலைகடல்நீர்க்குழம்பஅகடாடவோடி
அகல்வானுரிஞ்ச * முதுகில்
மலைகளைமீதுகொண்டுவருமீனைமாலை
மறவாது இறைஞ்சுஎன்மனனே! (2)
1982 ## nilai iṭam ĕṅkum iṉṟi nĕṭu vĕl̤l̤am umpar *
val̤a nāṭu mūṭa imaiyor *
talai iṭa maṟṟu ĕmakku or caraṇ illai ĕṉṉa *
araṇ āvaṉ ĕṉṉum arul̤āl **
alai kaṭal nīr kuzhampa akaṭu āṭa oṭi *
akal vāṉ uriñca * mutukil
malaikal̤ai mītukŏṇṭu varum mīṉai mālai *
maṟavātu iṟaiñcu ĕṉ maṉaṉe

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1982. When the world was inundated by a terrible flood and the waves of the ocean rose and the water flowed everywhere and people had no place to go, the gods in the sky went to the lord and said, “There is no refuge for us, ” and Thirumāl took the form of a fish, carried all the mountains on his back and saved all. Worship him, O my heart, do not forget him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மனனே! என் மனமே!; எங்கும் எங்கும்; நிலை நிலைத்து; இடம் இன்றி நிற்க இடமில்லாமல்; நெடு வெள்ளம் பெரும் வெள்ளம்; உம்பர் தேவர்களுடைய; வள நாடு செழிப்பான லோகத்தை; மூட வியாபிக்க; இமையோர் தேவர்கள் பயந்து; தலை இட மற்று தலை வணங்கி யாசிக்க; எமக்கு எங்களுக்கு உங்களைத் தவிர; ஓர் சரண் வேறு சரண்; இல்லை என்ன இல்லை என்ன; ஆவன் உங்களுக்கு; அரண் நான் சரணமாகிறேன்; என்னும் அருளால் என்னும் அருளால்; அலை கடல் அலை கடல்; நீர் குழம்ப நீர் குழம்பாகும்படி; மீனை மீன் வடிவுடன்; அகடு தன் கீழ் வயிற்றிலே; ஆட அலை எறியும்படியாக அழுத்தி; அகல் வான் விசாலமான ஆகாயம் வரை; ஓடி உரிஞ்ச ஓடி வீசும்படியாக; மலைகளை மலைகளை; முதுகில் மீது தன் முதுகின் மீது; கொண்டு வரும் ஏற்றி கொண்டு வரும்; மாலை எம்பெருமானை; மறவாது மறவாமல்; இறைஞ்சு வணங்கித் தொழுவாய்