Chapter 9
Proverb Songs - (புள் உரு)
பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு
These verses are composed as if the mother of Parakala Nayaki, who deeply loves the Lord, addresses Krishna using proverbs. She is aware of her daughter's immense love for the Lord and is distressed by the Lord's apparent indifference and failure to unite with her daughter. The mother questions the Lord in each verse, using proverbs to convey her concerns + Read more
நற்றாய் கண்ணனை வேண்டல் பழமொழியால் பணிந்துரைத்த பாட்டு. தன் மகள்(பரகால நாயகி) பகவான்மீது கொண்டுள்ள அளவற்ற காதலையும், அதற்கேற்பப் பகவான் வந்து தன் மகளோடு கலக்காமல் வாளா இருப்பதையும் தாய் அறிந்தாள். எம்பெருமானே! இம்மகளை இவ்வாறு (துன்புறுமாறு) விடலாமா? இவ்வாறு இருப்பது உன் பெருமைக்குத் தகுமா? என்பதை ஒவ்வொரு பழமொழியைக் கொண்ட ஒவ்வொரு பாசுரத்தினால் பகவானிடம் அந்தத் தாய் கூறுதல்போல் அமைந்துள்ளது இப்பகுதி.
Verses: 1932 to 1941
Grammar: Eṉsīr Āsiriya Viruththam / என்சீர் ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will increase devotion and wealth
- PT 10.9.1
1932 ## புள் உரு ஆகி நள் இருள் வந்த *
பூதனை மாள * இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த *
ஊக்கம் அதனை நினைந்தோ? **
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் *
காரிகை மாதர் கருத்தும் *
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்கப் *
பேசுவது? எந்தை பிரானே 1 - PT 10.9.2
1933 மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி *
மால் விடை ஏழும் அடர்த்து * ஆயர்
அன்று நடுங்க ஆ நிரை காத்த *
ஆண்மை கொலோ? அறியேன் நான் **
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா *
நீ இவள் தன்னை நின் கோயில் *
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா *
முன் கை வளை கவர்ந்தாயே 2 - PT 10.9.3
1934 ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி *
ஆற்றலை ஆற்றல் மிகுத்து *
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் *
கடந்த நின் கடுந் திறல் தானோ **
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை *
நெடுங் கடல் அமுது அனையாளை *
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் *
இவள் எனக் கருதுகின்றாயே? 3 - PT 10.9.4
1935 மல்கிய தோளும் மான் உரி அதளும் *
உடையவர் தமக்கும் ஓர் பாகம் *
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த *
கரதலத்து அமைதியின் கருத்தோ? **
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
வந்து * முன்னே நின்று போகாய் *
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் *
தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? 4 - PT 10.9.5
1936 செரு அழியாத மன்னர்கள் மாளத் *
தேர் வலம் கொண்டு அவர் செல்லும் *
அரு வழி வானம் அதர்படக் கண்ட *
ஆண்மை கொலோ? அறியேன் நான் **
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை *
சீர்மையை நினைந்திலை அந்தோ *
பெரு வழி நாவல் கனியினும் எளியள் *
இவள் எனப் பேசுகின்றாயே 5 - PT 10.9.6
1937 அரக்கியர் ஆகம் புல் என வில்லால் *
அணி மதிள் இலங்கையார் கோனை *
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற *
சேவகமோ செய்தது இன்று? **
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் *
கொண்டு முன்னே நின்று போகாய் *
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் *
என் செய்வது? எந்தை பிரானே 6 - PT 10.9.7
1938 ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச *
அலை கடல் உலகம் முன் ஆண்ட *
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழப் *
படை மழுப் பற்றிய வலியோ **
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு
வந்து * முன்னே நின்று போகாய்? *
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய்! *
குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா 7 - PT 10.9.8
1939 பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற *
வள் உகிரால் பிளந்து * அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த *
பெருமைகொலோ செய்தது இன்று? **
பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை *
பெருமையை நினைந்திலை பேசில் *
கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் *
இவள் எனக் கருதுகின்றாயே 8 - PT 10.9.9
1940 நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய் *
நின்ற நின் நீர்மையை நினைந்தோ? *
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று *
அன்னது ஓர் தேற்றன்மை தானோ **
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய *
பாவையைப் பாவம் செய்தேனுக்கு *
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
ஆக * நின் மனத்து வைத்தாயே? 9 - PT 10.9.10
1941 ## வேட்டத்தைக் கருதாது அடி இணை வணங்கி *
மெய்ம்மையே நின்று எம் பெருமானை *
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் *
மான வேல் கலியன் வாய் ஒலிகள் **
தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் *
பழமொழியால் பணிந்து உரைத்த *
பாட்டு இவை பாடப் பத்திமை பெருகிச் *
சித்தமும் திருவொடு மிகுமே 10