PT 10.1.6

திருச்சேறையும் திருக்குடந்தையும்

1853 வானை ஆரமுதம்தந்தவள்ளலை *
தேனைநீள்வயல் சேறையில்கண்டுபோய் *
ஆனைவாட்டியருளும் அமரர்தம்
கோனை * யாம்குடந்தைச்சென்றுகாண்டுமே.
1853 vāṉai ār amutam * tanta val̤l̤alai *
teṉai nīl̤ vayal * ceṟaiyil kaṇṭu poy **
āṉai vāṭṭi arul̤um * amarar-tam
koṉai * yām kuṭantaic cĕṉṟu kāṇṭume-6

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1853. He is the sky and the generous god who gave the divine nectar to the gods and killed the elephant Kuvalayābeedam. I will see him, sweet as honey, in Thiruthancherai surrounded with flourishing fields. I will go to Thirukkudandai and see the king of the gods there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானை ஆர் தேவலோகத்திலுள்ளவர்களுக்கு; அமுதம் அமுதம்; தந்த வள்ளலை அளித்த வள்ளலும்; தேனை தேன் போன்ற இனியவனும்; நீள் வயல் நீண்டவயல்களையுடை; சேறையில் யாம் திருச்சேறையில் நாம்; கண்டு போய் வணங்கினோம்; ஆனை குவலயாபீட யானையை; வாட்டி கொன்று; அமரர் தம் அமரர்க்கு; அருளும் அருள் செய்த; கோனை பெருமானை; குடந்தைச திருக்குடந்தையில்; சென்று காண்டுமே சென்று வணங்குவோம்