PT 1.9.3

குறிக்கோள் இலாதவன் நான்; எனினும் ஆட்கொள்

1030 கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றி லாமையினால் *
என்றேனும்இரந்தார்க்கு இனிதாகஉரைத்தறியேன் *
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா! *
அன்றேவந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
PT.1.9.3
1030 kŏṉṟeṉ pal uyiraik * kuṟikkol̤ ŏṉṟu ilāmaiyiṉāl *
ĕṉṟeṉum irantārkku * iṉitu āka uraittu aṟiyeṉ **
kuṉṟu ey mekam atir * kul̤ir mā malai veṅkaṭavā *
aṉṟe vantu aṭainteṉ * aṭiyeṉai āṭ kŏṇṭarul̤e-3

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1030. O Lord of cool Thiruvēṅkaṭam, where thundering clouds rest on lofty hills. I lacked all knowledge of the soul’s true aim and, in that ignorance, harmed many living beings. To those who begged, not once did I offer a kind word. But the day I realized my ruin, I came and fell at Your feet. I am Your fallen servant, please accept me, and make me Yours.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்று ஏய் மலைபோன்று முழங்கும்; மேகம்அதிர் மேகங்களையுடைய; குளிர் குளிர்ந்த; மாமலை வேங்கடவா! வேங்கடமலையிலிருப்பவனே!; குறிக்கோள் ஒன்று ஆத்மாவைப்பற்றிய அறிவு; இலாமையினால் இல்லாமையினாலே; பல்உயிரை பல பிராணிகளை; கொன்றேன் கொன்றேன்; இரந்தார்க்கு யாசித்தவர்களுக்கு; என்றேனும் ஒருநாளும்; இனிது ஆக இனிமையாக ஒரு வார்த்தை; உரைத்து அறியேன் பதிலளித்ததில்லை; அன்றே வந்து இதை உணர்ந்த அன்றே வந்து; அடைந்தேன் உன்னை பற்றினேன்; அடியேனை தாஸனான என்னை; ஆட்கொண்டருளே ஆட் கொண்டருளவேணும்
kunṛu on the peaks; ĕy resting; mĕgam clouds; adhir making loud noise; kul̤ir being cool; great; malai vĕngadavā oh one who has ṣrī vĕnkatāchalam as your identity!; kuṛikkŏl̤ knowledge such as discrimination between body and self; onṛu none; ilāmaiyināl due to not having; pal uyirai many creatures; konṛĕn tormented;; irandhārkku for those who begged; inidhāga with good words; enṛĕnum ever; uraiththaṛiyĕn ī, the servitor, who did not say; anṛĕ right then; vandhu adaindhĕn ī came and surrendered;; adiyĕnai āt koṇdu arul̤ kindly accept my service.