PT 1.9.2

பாவம் செய்தேன்; எனினும் பொறுத்து ஆட்கொள்

1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு * மாநிலத்து
நானேநானாவிதநரகம்புகும் பாவம்செய்தேன் *
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை * என்
ஆனாய்! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
PT.1.9.2
1029 māṉ ey kaṇ maṭavār * mayakkil paṭṭu * mā nilattu
nāṉe nāṉāvita * narakam pukum pāvam cĕyteṉ **
teṉ ey pūm pŏzhil cūzh * tiruveṅkaṭa mā malai * ĕṉ
āṉāy!-vantu aṭainteṉ * aṭiyeṉai āṭ kŏṇṭarul̤e-2

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1029. O Lord of Thiruvēṅkaṭam, where bees hum through flower-filled groves. You are my only refuge! Drawn by the deer-like eyes of women, I strayed and sinned, falling into many hells of this wide world. Yet now, I have come to You. I, Your lowly servant, stand surrendered at Your feet. O Lord, take me as Yours and graciously make me Your own.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் ஏய் வண்டுகள் நிறைந்த; பூம் பொழில் பூஞ்சோலைகளாலே; சூழ் சூழ்ந்த; திருவேங்கட மாமலை திருவேங்கடத்திலிருப்பவனே!; என் ஆனாய்! என் ஸ்வாமியே!; மான் ஏய் கண் மான்போன்ற கண்களையுடைய; மடவார் அழகிகளை; மயக்கில் பட்டு பார்த்து மயங்கி; மா நிலத்து இந்த உலகத்தில்; நானே நானாவித நானே பலவித; நரகம் புகும் நரகங்களிலே; புகும் பாவம் புகுவதற்கான பாவங்களை; செய்தேன் செய்தேன்; வந்து ஆனால் இன்று உன்னை வந்து; அடைந்தேன் சரணம் அடைந்த; அடியேனை தாஸனான என்னை; ஆட்கொண்டருளே ஆட் கொண்டருளவேணும்
thĕn beetles; ĕy filled; having flowers; pozhil by garden; sūzh surrounded; thiruvĕngada mā malai being the one who is having thirumalā as abode; en ānāy oh one who forbears my faults just as an elephant would do!; mān ĕy like that of a deer; kaṇ eyes; madavār women who are having humility as well, their; mayakkil in their glance; pattu being captivated; mā nilaththu in the vast earth; nānāvidha naragam in many types of narakam (hell); pugum to enter; pāvam sin; nānĕ ī have individually; seydhĕn having performed; vandhu came; adaindhĕn ī held your highness- divine feet as refuge;; adiyĕnai ī, the servitor; āl̤ koṇdu arul̤ĕ ḵindly accept my service.