PT 1.8.4

பார்த்தசாரதியே வேங்கடத்தில் நிற்பவன்

1021 பார்த்தற்காய்அன்றுபாரதம்கைசெய்திட்டுவென்ற பரஞ்சுடர் *
கோத்துஅங்குஆயர்தம்பாடியில் குரவைபிணைந்தஎங்கோவலன் *
ஏத்துவார்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவிய எம்பிரான் *
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)
PT.1.8.4
1021 pārttaṟku āy aṉṟu pāratam kaicĕy tiṭṭu * vĕṉṟa parañcuṭar *
kottu aṅku āyar-tam pāṭiyil * kuravai piṇainta ĕm kovalaṉ **
ettuvār-tam maṉattu ul̤l̤āṉ * iṭavĕntai meviya ĕm pirāṉ *
tīrtta nīrt taṭam colai cūzh * tiruveṅkaṭam aṭai nĕñcame-4

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1021. Once, during the Bhārata war, Our Lord, the radiant Supreme Light, arranged the army for Arjuna's side and brought victory over Duryodhana. In Gokulam, among the cowherds, He danced the rāsa-kṛīdā, hand-in-hand with the girls. He is the One who dwells in the hearts of those who worship Him. He has made His abode at Thiruvidavendhai. And now, in Thiruvēṅkaṭam, surrounded by pure water ponds and lush groves, He remains. O mind, go and reach that sacred hill.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முற்காலத்தில்; பாரதம் பாரத யுத்தத்திலே; பார்த்தற்கு ஆய் அர்ஜுநாதிகளுக்காக; கைசெய்திட்டு அணி வகுத்து; வென்ற துர்யோதனாதிகளை வெற்றி பெற்ற; பரஞ்சுடர் பரஞ்சோதியானவனும்; அங்கு ஆயர் தம் அங்கு ஆயர்களின் திருவாய்; பாடியில் பாடியில்; குரவை கோத்து பிணைந்த ராஸக்ரீடை செய்த; எம் கோவலன் எம்பெருமான்; ஏத்துவார் தம் தன்னைத் துதிப்பவர்களுடைய; மனத்து உள்ளான் மனத்திலிருப்பவனும்; இடவெந்தை திருவிடவெந்தையிலே; மேவிய எம்பிரான் இருப்பவனும்; தீர்த்த நீர்த் தடம் புண்ய தீர்த்தங்களாலும்; சோலை சூழ் சோலைகளாலும் சூழ்ந்த; திருவேங்கடம் திருவேங்கடம்; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
anṛu towards the end of dhvāpara yugam; bāradham in the bhāratha yudhdham (mahābhāratha battle); pārththaṛkāy for arjuna; kai seydhittu personally organising the army; venṛa won over (dhuryŏdhana et al, and due to that); param sudar one who is very radiant; āyar tham pādiyil in thiruvāyppādi (ṣrī gŏkulam); em kŏvalan taking birth in the cowherd clan; angu in such ṣrī gŏkulam; kuravai in rāsa krīdā; kŏththup piṇaindha holding hands and danced; ĕththuvār tham those who praise, their; manaththu in mind; ul̤l̤ān present eternally; idavendhai in thiruvidavendhai; mĕviya is firmly present; em pirān my lord-s; thīrththam pure; nīr having water; thadam by ponds; sŏlai gardens; sūzh surrounded by; thiruvĕngadam adai nenjamĕ ŏh mind! ṛeach thirumalā.