PT 1.5.4

அரக்கரை அழித்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்

991 ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய *
தேரா அரக்கர்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான் * பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டு அறைகின்ற
தாரான் * தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.4
991 ūrāṉ kuṭantai uttamaṉ * ŏru kāl iru kāl cilai val̤aiya *
terā arakkar ter-vĕl̤l̤am cĕṟṟāṉ * vaṟṟā varu puṉal cūzh
perāṉ ** per āyiram uṭaiyāṉ * piṟaṅku ciṟai vaṇṭu aṟaikiṉṟa
tārāṉ * tārā vayal cūzhnta * cāl̤akkirāmam aṭai nĕñce-4 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

991. The Supreme Purushottaman dwells in Thiruvūrakam and sacred Kudandhai. Once, when fierce warriors came against Him, He bent His bow at both ends and crushed the chariot ranks of the arrogant rākshasas. He stands in Thiruppēr, surrounded by the unfailing Kaveri waters. This Lord of countless names, wearing a Thulasi garland, resides in Śālagrāmam, where the thārā birds call, fertile fields spread wide, and bees hum in delight. Go there, O heart! Reach that sacred place!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊரான் ஊரகத்தில் இருப்பவனும்; குடந்தை திருக்குடைந்தையில்; உத்தமன் இருக்கும் உத்தமனும்; ஒரு கால் முன்பு கர-தூஷணர்கள் எதிர்த்தபோது; சிலை வில்லின்; இருகால் இரண்டு நுனிகளையும்; வளைய வளைத்து; தேரா அரக்கர் விவேகமில்லாத அரக்கர்களின்; தேர் வெள்ளம் ரத சமூகங்களை; செற்றான் சிதைத்தவனும்; வற்றா வரு வற்றாமல் பெருகி வரும்; புனல் சூழ் காவிரிநீர் சூழ்ந்த; பேரான் பேர் திருப்பேர்நகரில் இருப்பவனும்; ஆயிரம் ஆயிரம் நாமங்களை; உடையான் உடையவனும்; பிறங்கு நெருங்கி யிருக்கிற; சிறை சிறகுகளை யுடைய; வண்டு வண்டுகள்; அறைகின்ற ஆரவாரிக்கின்ற; தாரான் துளசி மாலை அணிந்த பெருமானிருக்குமிடம்; தாரா தாரா என்னும் நீர்ப்பறவைகளால்; வயல் சூழ்ந்த சூழப்பட்ட வயல்களையுடைய; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
ūrān one who is having thiruvūragam as his abode; kudandhai one who is mercifully resting in thirukkudandhai; uththaman being purushŏththama; orukāl when karan et al came to fight; silai bow-s; irukāl both ends; val̤aiya bent (to show his strength); thĕrā cannot analyse and understand (that he cannot be won by us); arakkar rākshasas-; thĕr vel̤l̤am groups of chariots; seṝān destroyed them to become pieces; vaṝā not becoming dry; varu overflowing continuously; punal with water; sūzh surrounded by; pĕrān one who is eternally residing in thiruppĕr nagar; āyiram pĕr udaiyān one who has countless divine names; piṛangu dense; siṛai having wings; vaṇdu beetles; aṛaiginṛa singing with tune; thārān sarvĕṣvaran who is adorning thiruththuzhāy (thul̤asi) garland and mercifully residing; thārā filled with birds named thārā; vayal by fertile fields; sūzhndha surrounded by; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṭry to reach ṣrī sāl̤agrāmam.