PT 1.5.2

மனமே! சாளக்கிராமம் சேர்

989 கடம்சூழ்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும் *
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கைபொடியாவடிவாய்ச்சரம்துரந்தான் *
இடம்சூழ்ந்துஎங்கும் இருவிசும்பில் இமையோர்வணங்க மணம்கமழும் *
தடம்சூழ்ந்துஎங்கும் அழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.2
989 kaṭam cūzh kariyum parimāvum * ŏli māt terum kālāl̤um *
uṭaṉ cūzhntu ĕzhunta kaṭi ilaṅkai * pŏṭiyā vaṭi vāyc caram turantāṉ **
iṭam cūzhntu ĕṅkum iru vicumpil * imaiyor vaṇaṅka maṇam kamazhum *
taṭam cūzhntu ĕṅkum azhaku āya * cāl̤akkirāmam aṭai nĕñce-2 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

989. Elephants, horses, chariots, and soldiers gathered around the mighty city of Lanka. Rama shot his sharp arrows and turned that fortress into dust. The gods in heaven bowed to Him and flowers filled the earth with fragrance. In a land full of clear ponds and beauty stands sacred Śālagrāmam. O heart, go there and reach it!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடம் சூழ் மதஜலத்தையுடைய; கரியும் யானைகளும்; பரிமாவும் குதிரைகளும்; ஒலி ஒலியையுடைய; மாத் தேரும் பெரிய ரதங்களும்; காலாளும் காலாட்படையும்; உடன் சூழ்ந்து ஒன்றாகத் திரண்டு; எழுந்த கடி எழுந்த அரணையுடைய; இலங்கை இலங்கை; பொடியா பொடியாகும்படி; வடி வாய் கூர்மையான; சரம் அம்புகளை; துரந்தான் பிரயோகித்த ராமன் இருக்குமிடமான; இரு விசும்பில் சுவர்க்கத்திலுள்ள; இமையோர் வணங்க தேவர்கள் வணங்க; இடம் சூழ்ந்து எங்கும் பூமியெங்கும் வந்து; மணம் கமழும் மணம் கமழும் பூக்களையுடைய; தடம் தடாகங்களாலே; சூழ்ந்து எங்கும் சூழப்பட்டு எங்கும்; அழகு ஆய அழகாயிருக்கும்; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
kadam sūzh having the liquid that comes out during periods of exultation; kariyum elephants; parimāvum horses; oli resounding; māththĕrum great chariots; kālāl̤um foot soldiers; udan sūzhndhu gathering together; ezhundha appearing in a rousing manner; kadi fortified; ilangai evil forces in lankā; podiyā to become dust; vadi sharp; vāy having mouth; saram arrows; thurandhān chakravarthi thirumagan (divine son of dhaṣaratha) who shot; iru vast; visumbil residing in svarga (heaven); imaiyŏr dhĕvathās; idam engum on the vast earth; sūzhndhu spread; vaṇanga to be worshipped; maṇam fragrance (of flowers such as sengazhunīr); kamazhum blowing; thadam by ponds; sūzhndhu being surrounded; engum in all directions; azhagāya having beauty; sāl̤akkirāmam ṣrī sāl̤agrāmam; adai nenjĕ ŏh mind! ṭry to reach.