PT 1.4.8

இரணியனைப் பிளந்தவன் இருக்குமிடம் பதரி

985 மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன் பொன்னிறத்து உரவோன் *
ஊன்முனிந்துஅவனதுடல் இருபிளவா
உகிர்நுதிமடுத்து * அயன்அரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன் * தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
PT.1.4.8
985 māṉ muṉintu ŏru kāl vari cilai val̤aitta maṉṉavaṉ * pŏṉ niṟattu uravoṉ *
ūṉ muṉintu avaṉatu uṭal iru pil̤avā * ukir nuti maṭuttu ** ayaṉ araṉait
tāṉ muṉintu iṭṭa * vĕm tiṟal cāpam tavirttavaṉ * tavampurintu uyarnta
mā muṉi kŏṇarnta kaṅkaiyiṉ karaimel * vatari āccirāmattu ul̤l̤āṉe-8 **

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

985. Once in Pañcavaṭi, Rama bent His beautiful bow in anger and struck down the golden-hued Māriṣa. He tore the mighty Hiraṇya in two with just the tips of His nails. He removed the fierce curse that Brahma cast on Rudra. This same Lord, who did all these, is now at Badarikāśramam— where Ganga, brought by the great sage Bhagīratha through deep penance, flows along the riverbank.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு கால் ஒரு சமயம் பஞ்சவடியில் இருக்கும்பொழுது; மான் முனிந்து மாய மாரீசனின் மேல் சீறி; வரி சிலை அழகிய வில்லை அதன் மேலே; வளைத்த வளைத் தெறிந்த; மன்னவன் மன்னவன் ராமன்; பொன் நிறத்து பொன் போன்ற நிறத்தையும்; உரவோன் மிடுக்கையும் உடைய இரண்யனின்; ஊன் முனிந்து அவனது உடலை ஒழித்து அவன்; உடல் அந்த அசுரனுடைய சரீரம்; இரு பிளவா இரண்டு பிளவாகும்படி; உகிர் நுதி நகங்களின் நுனியை; மடுத்து அழுத்தினவன்; அயன் நான்முகக் கடவுள்; அரனை தான் சிவனை; முனிந்து இட்ட கோபித்து அவனுக்குக் கொடுத்த; வெம் திறல் சாபம் மிகவும் கடுமையான சாபத்தை; தவிர்த்தவன் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான்; தவம் மிகவும் கடும் தவம் செய்து; புரிந்து உயர்ந்த தபஸ்விகளின் தலைவரான; மா முனி கொணர்ந்த பகீரதன் கொண்டுவந்த; கங்கையின் கரை மேல் கங்கையின் கரை மேல்; வதரி ஆச்சிரமத்து பதரிகாச்ரமத்திலே; உள்ளானே உள்ளான்
oru kāl while remaining in panchavati; mān mārīcha who came in the form of a deer; munindhu showing anger on; vari beautiful; silai bow; val̤aiththa aimed (at him) by bending; mannavan being the king; pon niṛam having golden hue; uravŏn strong hiraṇya-s; ūn flesh; munindhu showing anger; avanadhu his; udal body; iru pil̤avā to split into two parts; ugir nudhi the edge of his nails; maduththu made to enter; avan thān brahmā himself; aranai rudhra; munindhu showing anger; itta gave; vem thiṛal very cruel; sābam curse; thavirththavan sarvĕṣvaran who eliminated; thavam purindhu performing penance; uyarndha became brahmarishi (due to that); māmuni viṣvāmithran; koṇarndha (perumāl̤ and il̤aiyaperumāl̤) brought along; gangaiyin karai mĕl on the banks of gangā; vadhariyāchchiramaththul̤l̤ānĕ is residing in ṣrī badharīkāṣramam