Chapter 3

Thiruvadari (Badrinath) - (முற்ற மூத்து)

திருவதரி
Thiruvadari (Badrinath) - (முற்ற மூத்து)
The jujube trees are referred to as Badri trees, and the place abundant with them is Badrikashram. The Lord residing there is Badrinarayana. This section extols the greatness of the Badrikashram Kshetram. Going there is a rare and difficult task. The āzhvār advises, "Visit and serve Badrinath before your body becomes weak."
இலந்தை மரங்களைப் பதரி என்பர். அவை நிறைந்த இடம் பதரிகாசிரமம். அங்குள்ள பெருமான் பத்ரிநாராயணன். இப்பகுதி பதரீ சேக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகிறது. அங்கு சென்று வருவது அருஞ்செயல். உடல் தளர்வதற்குமுன் பதரியை ஸேவித்து வாருங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
Verses: 968 to 977
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and rule the skys
  • PT 1.3.1
    968 ## முற்ற மூத்துக் கோல் துணையா * முன் அடி நோக்கி வளைந்து *
    இற்ற கால் போல் தள்ளி மெள்ள * இருந்து அங்கு இளையாமுன் **
    பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி * பெரு முலை ஊடு * உயிரை
    வற்ற வாங்கி உண்ட வாயான் * வதரி வணங்குதுமே (1)
  • PT 1.3.2
    969 முதுகு பற்றிக் கைத்தலத்தால் * முன் ஒரு கோல் ஊன்றி *
    விதிர் விதிர்த்துக் கண் சுழன்று * மேல் கிளைகொண்டு இருமி **
    இது என் அப்பர் மூத்த ஆறு என்று * இளையவர் ஏசாமுன் *
    மது உண் வண்டு பண்கள் பாடும் * வதரி வணங்குதுமே (2)
  • PT 1.3.3
    970 உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து * ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி *
    நெறியை நோக்கிக் கண் சுழன்று * நின்று நடுங்காமுன் **
    அறிதி ஆகில் நெஞ்சம்! அன்பாய் * ஆயிரம் நாமம் சொல்லி *
    வெறி கொள் வண்டு பண்கள் பாடும் * வதரி வணங்குதுமே (3)
  • PT 1.3.4
    971 பீளை சோரக் கண் இடுங்கிப் * பித்து எழ மூத்து இருமி *
    தாள்கள் நோவத் தம்மில் முட்டித் * தள்ளி நடவாமுன் **
    காளை ஆகிக் கன்று மேய்த்துக் * குன்று எடுத்து அன்று நின்றான் *
    வாளை பாயும் தண் தடம் சூழ் * வதரி வணங்குதுமே (4)
  • PT 1.3.5
    972 பண்டு காமர் ஆன ஆறும் * பாவையர் வாய் அமுதம்
    உண்ட ஆறும் * வாழ்ந்த ஆறும் * ஒக்க உரைத்து இருமி **
    தண்டு காலா ஊன்றி ஊன்றித் * தள்ளி நடவாமுன் *
    வண்டு பாடும் தண் துழாயான் * வதரி வணங்குதுமே (5)
  • PT 1.3.6
    973 எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி * இருமி இளைத்து * உடலம்
    பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் * பேசி அயராமுன் **
    அத்தன் எந்தை ஆதி மூர்த்தி * ஆழ் கடலைக் கடைந்த *
    மைத்த சோதி எம்பெருமான் * வதரி வணங்குதுமே (6)
  • PT 1.3.7
    974 பப்ப அப்பர் மூத்த ஆறு * பாழ்ப்பது சீத் திரளை
    ஒப்ப * ஐக்கள் போத உந்த * உன் தமர் காண்மின் என்று **
    செப்பு நேர் மென் கொங்கை நல்லார் * தாம் சிரியாத முன்னம் *
    வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் * வதரி வணங்குதுமே (7)
  • PT 1.3.8
    975 ஈசி போமின் ஈங்கு இரேன்மின் * இருமி இளைத்தீர் * உள்ளம்
    கூசி இட்டீர் என்று பேசும் * குவளை அம் கண்ணியர் பால் **
    நாசம் ஆன பாசம் விட்டு * நல் நெறி நோக்கல் உறில் *
    வாசம் மல்கு தண் துழாயான் * வதரி வணங்குதுமே (8)
  • PT 1.3.9
    976 புலன்கள் நைய மெய்யில் மூத்துப் * போந்து இருந்து உள்ளம் எள்கி *
    கலங்க ஐக்கள் போத உந்திக் * கண்ட பிதற்றாமுன் **
    அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு * ஆயிரம் நாமம் சொல்லி *
    வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் * வதரி வணங்குதுமே (9)
  • PT 1.3.10
    977 ## வண்டு தண் தேன் உண்டு வாழும் * வதரி நெடு மாலைக் *
    கண்டல் வேலி மங்கை வேந்தன் * கலியன் ஒலி மாலை **
    கொண்டு தொண்டர் பாடி ஆடக் * கூடிடில் நீள் விசும்பில் *
    அண்டம் அல்லால் மற்று அவர்க்கு * ஓர் ஆட்சி அறியோமே (10)