PT 1.2.8

பிரமன் முதலிய யாவரும் திருப்பிருதியை வணங்குவர்

965 இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை *
இரும்பசியதுகூர *
அரவம் ஆவிக்கும் அகன்பொழில்தழுவிய *
அருவரையிமயத்து **
பரமனாதிஎம்பனிமுகில்வண்ணனென்று *
எண்ணிநின்றுஇமையோர்கள் *
பிரமனோடுசென்றுஅடிதொழும்பெருந்தகைப் *
பிரிதிசென்றடைநெஞ்சே!
PT.1.2.8
965 iravu kūrntu irul̤ pĕrukiya varai muzhai * irum paci atu kūra *
aravam āvikkum akaṉ pŏzhil tazhuviya * aruvarai imayattu **
paramaṉ āti ĕm paṉi mukil vaṇṇaṉ ĕṉṟu * ĕṇṇi niṉṟu imaiyorkal̤ *
piramaṉoṭu cĕṉṟu aṭitŏzhum pĕruntakaip * piriti cĕṉṟu aṭai nĕñce! (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

965. At night, when darkness deepens, And the caves of the mountains grow heavy with gloom, Ravenous serpents let out long yawns from shadowed dens. In the lower folds of the Himalayas, Where wild groves embrace the slopes, The gods, along with Brahma, come in reverence, Calling Him Paramapurushane (O Supreme One), Adi Moolame (O Primal Source) And “The One hued like a cool raincloud.” They stand in awe and praise His feet, That wondrous One who grants refuge. Go, O heart, and reach Thiruppirithi!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரவு இராப்பொழுதே; கூர்ந்து அதிகமாக இருக்க; இருள் பெருகிய இருள் நிறைந்த; வரை முழை மலை குகைகளிலே; இரும் பசி அது கூர பெரும் பசி உடைய; அரவம் மலைப்பாம்புகள்; ஆவிக்கும் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும்; அகன் பொழில் தழுவிய உட்சோலைகளோடு கூடிய; அருவரை ஏறமுடியாத; இமயத்துள் தாழ்வரைகளோடு கூடிய இமயமலையில்; இமையோர்கள் தேவர்கள்; பிரமனோடு சென்று நான்முகனோடு கூடச் சென்று; பரமன் பரமபுருஷனே! என்றும்; ஆதி ஆதி மூலமே! என்றும்; எம் பனி முகில் குளிர்ந்த மேகம் போன்ற; வண்ணன் என்று நிறத்தையுடையவனே என்றும்; எண்ணி நின்று துதித்துக்கொண்டு; அடி தொழும் திருவடிகளை வணங்குதற்குரிய; பெருந்தகை பெருமையுடைய; பிரிதி சென்று அடை நெஞ்சே! திருப்பிரிதி சென்று வணங்குக
iravu night only; kūrndhu being more; irul̤ perugiya being dark only; varai muzhai in the mountain caves; irum pasi adhu great hunger; kūra as increased; aravam pythons; āvikkum yawned; agan pozhil thazhuviya having inner garden; aru difficult to climb; varai having slopes; imayaththu in himavān; paraman oh greater than all!; ādhi ŏh cause of the universe!; em for us; pani cool; mugil cloud like; vaṇṇan oh one who is having a form; enṛu eṇṇi ninṛu saying in this manner; imaiyŏrgal̤ dhĕvathās; piramanŏdu with brahmā; senṛu go; adithozhum can approach; perum thagai having great fame; piridhi in thiruppiridhi; senṛu go; nenjĕ oh mind!; adai try to reach.