PMT 1.9

திருவரங்கத்தில் துள்ளிப் புரளவேண்டும்

655 தூராதமனக்காதல்தொண்டர்தங்கள்
குழாம்குழுமித்திருப்புகழ்கள்பலவும்பாடி *
ஆராதமனக்களிப்போடழுதகண்ணீர்
மழைசோரநினைந்துருகியேத்திநாளும் *
சீரார்ந்தமுழுவோசைபரவைகாட்டும்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *
போராழியம்மானைக்கண்டுதுள்ளிப்
பூதலத்திலென்றுகொலோபுரளும்நாளே?
655 tūrāta maṉakkātal-tŏṇṭar taṅkal̤
kuḻām kuḻumit * tiruppukaḻkal̤ palavum pāṭi *
ārāta maṉak kal̤ippoṭu aḻuta kaṇṇīr *
maḻai cora niṉaintu uruki etti ** nāl̤um
cīr ārnta muḻavu-ocai paravai kāṭṭum *
tiruvaraṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
por āḻi ammāṉaik kaṇṭu tul̤l̤ip *
pūtalattil ĕṉṟukŏlo pural̤um nāl̤e! (9)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

655. The fervent devotees assemble together and sing His praise with unpolluted hearts, shed tears that pour like rain, with joy that doesn't get satisfied. He reclines on the snake-bed in Srirangam where the sound of the drum beat is like that of the roaring ocean When will the day come when I see the dear lord with the discus (chakra), jump and roll on the ground in frenzy and worship Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூராத ஒரு போதும் திருப்தியுறாத; மனக்காதல் பக்தி மனத்தையுடைய; தொண்டர் தங்கள் தொண்டர்களின்; குழாம் குழுமி கூட்டம் கூடி பெருமானின்; திருப்புகழ்கள் குணங்களைப் புகழ்ந்து; பலவும் பாடி பலவற்றைப் பாடி; ஆராத மன திருப்தி பெறாத மனசிலுள்ள; களிப்போடு ஆனந்தத்தோடே; அழுத கண்ணீர் அழுத கண்ணீர்த் துளிகள்; மழை சோர மழை போல் பெருகி வர; நினைந்து கண்ணனை நினைத்து; உருகி மனமுருகி; ஏத்தி நாளும் எப்போதும் துதித்து; சீர் ஆர்ந்த சீர்மையான; முழவு இசைக்கருவிகளின்; ஓசை மெல்லிசை; பரவை கடலோசைபோல்; காட்டும் முழங்கப் பெற்ற; திருவரங்கத்து ஸ்ரீரங்கத்தில்; அரவணையில் பாம்பணைமேல்; பள்ளி கொள்ளும் கண்வளரும்; போர் ஆழி போர் செய்ய வல்ல சக்கராயுத; அம்மானை பெருமானை; கண்டு துள்ளி கண்டு துள்ளி; பூதலத்தில் பூமியில்; புரளும் நாளே! புரளும் நாள்; என்று கொலோ என்றோ?